மிருகத்தின் முத்திரை THE MARK OF THE BEAST 54-05-13 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில்,இந்தியானா, அமெரிக்கா 1. உங்களுக்கு நன்றி. அவர், "என்னை உமக்குள் மறைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறினார். அது அவ்வளவு அழகாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். உண்மையாகவே எனக்கு அது மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தயவான நன்றி மாலை வேளை கர்த்தருடைய ஆசிர்வாதங்கள் உங்கள் எல்லோர் மேலும் இருப்பதாக இன்று இரவு, இப்பொழுது மீண்டுமாக பக்கங்களை திறந்து வார்த்தையை நாம் படிப்பதற்கு, நமக்கு கிடைத்த ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. பாடல்கள் பாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். நான் அதை விரும்புகிறேன். நான் ஜனங்களிடம் அடிக்கடி இப்படி கூறுவதுண்டு “பரலோகத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது, அங்கே சிங்காசனத்தை சுற்றிலும் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லையென்றால் அங்கே மேலே பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள் நான் அங்கு இருப்பேன்” என்று, நல்ல பாடல்களை நான் நேசிக்கிறேன், ஆனால் சுவிசேஷ ஆராதனை நேரம், கூட்டங்களின் போது, நாம் முடிவு செய்த பிரகாரம் ஒரே ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல்கள் மட்டும் பாடினால் நாம் சீக்கிரமாக வார்த்தைக்கு போகலாம். நாம்வார்த்தைக்கு நேரம் கொடுக்க வேண்டும் பாருங்கள், இதுதான் முக்கியம், நேரடியாக வார்த்தைக்குச் செல்வதுதான் முக்கியமானதாக இருக்கிறது. நகரத்திற்கு வெளியில் இருந்து வந்திருக்கும் ஜனங்கள் இணைப்பு வண்டிகளில் (TRAILER) இருந்து கொண்டிருக்கிறார்கள். குறித்தபடி ஆராதனைக்கு சற்று முன்பு அவர்களை சந்தித்து இருக்கவேண்டும் என்னால் முடியவில்லை, மற்ற காரியங்கள் இருந்ததனால் அந்த நேரத்திற்கு என்னால் இருக்க முடியவில்லை. இதை கூறுவதற்கு நான் வருந்துகிறேன். ஆனால் ஆராதனை முடிந்த உடன் நான் அவர்களை சந்திப்பேன். நாம் எப்பொழுதும் ஒரு காரியத்தை விசேசப்படுத்துகிறோம், அதாவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், நாம் செய்வதற்காக உள்ள அவருடைய தெய்வீக சித்தத்தையும் விசேசப்படுத்துகிறோம், அவ்வளவு தான் ஆனால் அது அவருடைய தெய்வீக சித்தமாக இருக்குமானால், நாளை இரவு தேவனுடைய முத்திரை என்பதன் பேரில் கர்த்தருக்கு சித்தமானால் நாம் பேசப் போகிறோம். 2. இன்றிரவு இதை செய்வது, அவர் நமக்கு தந்த சிலாக்கியமாக இருக்குமானால் அல்லது அவருக்காக நாம் செய்யும் நம்முடைய சிலாக்கியமாக இருக்குமானால், இந்த மணிவேளையின் முக்கியமான பொருள் ஒன்றின் பேரில் நாங்கள் பேச விரும்புகிறோம் தலைப்பு மிருகத்தின் முத்திரை. 3. நாம் கடந்த இரவு சபை காலங்கள் ஏழு சபை காலங்களை குறித்து தியானித்தோம், எபேசு சபையின் காலத்தில் தொடங்கி சபை காலத்தின், கடைசி சபை காலத்தின் லவோதிக்கயா - வில் முடிந்தோம். தேவன்தாமே அவருடைய ஆசீர்வாதத்தை நாம் பேசும் பொழுது வார்த்தையோடு கூட்டுவராக. 4. இந்த தெய்வீக வார்த்தையை நாம் திறப்பதற்கு முன்பாக நாம் ஜெபத்திற்காக சிறிது நேரம் நமது தலைகளை வணங்குவோம். 5. தயவுள்ள எங்கள் பரலோகப் பிதாவவே, இன்றிரவு எங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த பெரிய சிலாக்கித்திற்காகவும் அதாவது, ஜீவனோடு இருப்பதற்கும், இந்த பூமியில் மேல் இன்றிரவு இருப்பதற்கும் நல்ல சுகத்தையும் பெலத்தையும் உடையவர்களாய் தேவனுடைய வார்த்தை வாசிக்கப்படுகின்றதை இக்கட்டிடத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறதுமான, சிலாக்கியத்திற்காகவும் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கிறோம். 6. எங்களுடைய உறவின் முறையானாகிய மீட்பராக (இனத்தான் மீட்பராக) இருந்து, அவரே அவருடைய இரத்தத்தினால் நம்மை கழுவி, பாவத்திலிருந்து நம்மை சுத்திகரித்து, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக, நம்மை மாசற்றவர்களாய், பிதாவுக்கு முன்பாக, இப்பொழுது எங்களை நிறுத்துகிறவரே, நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நீர்தாமே வந்து வார்த்தையை எடுத்து எங்களுடைய இருதயத்திற்குள் திறந்து கொடுப்பிராக, வார்த்தையானது போதிக்கப்படுகையிலே, பரிசுத்த ஆவியானவர்தாமே அதை பற்றி பிடித்து, அந்த வார்த்தையை தாமே நேராக அதன் இலக்கை நோக்கி, ஒவ்வொரு இருதயத்தையும், எங்களுடைய இருதயத்தையும், மற்றும் இங்கு அமர்ந்து உள்ளவர்களின் இருதயத்தையும் நோக்கி ஓடுவதாக, எங்களுக்கு அது தேவையாய் இருப்பதினால் பிதாவே அது எங்களுக்கு அளிக்கப்படுவதாக, வார்த்தையை ஒருவனும் குற்றமாக எடுக்காதிருப்பானாக, பிதாவே; உம்முடைய நடத்துதலுக்கு முரணாக நான் எந்த காரியத்தையாகிலும், எந்த நேரத்திலாவது கூறினால் பரிசுத்த ஆவியானவர்தாமே என்னுடைய வாயை நிறுத்துவாராக, சத்தியம் எதுவோ அதை மட்டுமே நான் அறியவும் பின்னர் அதில் நடக்கவும் மட்டுமே நான் வாஞ்சிக்கிறேன். 7. இந்த ஆராதனையின் வீட்டிலே நாங்கள் கூடி வந்திருக்கும் இந்த வேளையிலே எங்களை ஒன்று கூட்டி ஆசிர்வதியும். எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும், எங்களுடைய பாவங்கள் இரத்தத்திற்கு கீழே இருப்பதாக, இந்த நேரத்தில் எங்களுடைய ஆவியானது, சரியான நோக்கத்துடன் ஆராதனையில் வைக்கப்படுவதாக, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 8. இப்பொழுது, நான் போதித்துக் கொண்டிருக்கிறேன் இங்கே இருக்கின்ற இந்த காகித துண்டில் நான் அநேக வேத வார்த்தைகளை குறிப்பிடுவதற்கும், வாசிப்பதற்கும் துவங்குவதற்கும் எழுதி வைத்திருக்கிறேன். இப்பொழுது இங்கே எழும்பி நின்றவுடன் அவைகளில் ஒன்றையும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வே எனக்கு ஏற்படவில்லை. வழக்கமாக அந்த விதமாகத்தான் அது போகின்றது. துவங்குவதற்கு நான்கு, ஐந்து வேத வாக்கியங்களை குறிப்பிட்டு வைத்திருக்கிறேன். 9. ஆனால் நான் வாசிக்க அல்லது இதை முதலில் இதை கூற விரும்புகிறேன். அதாவது நான் எப்பொழுதும் சிந்தித்துப் பேசுவதில்லை, உங்களுக்கே தெரியும், ஒருக்கால் நீங்கள் செய்வதை காட்டிலும், அதிகமாக கூறும்படியாக எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை, பாருங்கள் அப்படியாய் ஒரு காரியமும் இல்லை. நான் அவருக்காக காத்திருப்பேன். நான் அதைப் பார்ப்பது போன்று நான் கரத்தை நீட்டி அதை எடுத்து அதை அப்படியே கொடுப்பேன். சில சமயங்களில் அது ஒருக்கால் கரடு முரடாய் தோன்றலாம். ஆனால் அந்த ஒரு விதத்தில் மட்டுமே நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன். எனவே அந்த ஒரே விதத்தில்தான் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். 10. இப்பொழுது இன்றிரவு அதை மீண்டும் கூறுவேன். இது எந்த தனிப்பட்ட நபரையோ அல்லது ஒருவருடைய மதத்தையோ நோக்கி கூறும் ஒன்றல்ல பாருங்கள், அப்படியாய் இல்லவே இல்லை. எங்களுக்கு அதில் நம்பிக்கை கிடையாது. நாம் உண்மையான அசல் அமெரிக்கர்கள் என்று விசுவசிக்கிறோம். அதாவது எவரொருவனும் அவனவனுடைய சொந்த மனசாட்சி அவனிடத்தில் கூறும் வண்ணமாய் தேவனை தொழுது கொள்ளும் சிலாக்கியம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று விசுவாசிக்கிறோம், நாங்கள் அந்த விதமாக இருக்க விரும்புகிறோம், ஆனால் ஒவ்வொரு சபையிலும் நமக்கு உபதேசங்கள் உண்டு. 11. அநேக நேரங்களில், ஸ்தாபனங்களில், அமைப்புகளில் அவர்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கும், அது ஒரு கோட்பாடு' இது எங்களுடைய கோட்பாடு' என்று அவர்கள் அதில் நிற்கிறார்கள். போதகர் என்ன கருதினாலும் கவலை இல்லை. அவர் கோட்பாட்டை பிரசங்கிக்க வேண்டும். ஏனென்றால், அவன் ஸ்தாபனத்திற்குள் இருக்கிறான். 12. இங்கே எங்களுக்குள்ளே கிறிஸ்து அல்லாமல் வேறொரு கோட்பாடு கிடையாது. அதுவே எங்களுடைய கோட்பாடு, அன்பை தவிர நியமங்கள் இல்லை, வேதாகம் அல்லாமல் வேறொரு புத்தகம் இல்லை. கிறிஸ்து எங்கள் தலை, வேதாகமம் எங்களுடைய பாட புத்தகம், உலகம் எங்களுடைய பிறப்பிடம், எனவே பிரசுங்கிக்க நடத்தப்படுவதாக நான் உணருகின்ற விதமாகவே, அதை காணுகின்ற விதமாகவே நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். 13. பின்னர் இந்த நேரத்தில் விசேசமாக இந்த உண்மையான, கரடு முரடான, கடினமாக வெட்டும் சுவிசேஷத்தின் பாகத்தை பேசுவதில், உங்களுக்கே தெரியும், இது நியாயத் தீர்ப்பின் வீடாக இருக்கிறது. நியாயத் தீர்ப்பு எங்கே துவங்குகிறது. தேவனுடைய வீட்டிலே, சரியா? இங்கே தான் நியாயத் தீர்ப்பு துவங்குகிறது. இங்கே உங்களுக்கு ஒரு வழக்கு இருந்து நீங்கள் நியாயஸ்தலத்திற்கு போவீர்களானால், அங்கே ஒரு சட்டபுத்தகம் இருக்கிறது. நீங்கள் எதற்காக நியாயம் தீர்க்கப்படுகிறீர்கள் என்பதை கண்டறிய அவர்கள் இந்த சட்டத்தை வாசிக்க வேண்டும். அந்தவிதமாகவே தேவனுடைய வீட்டிலும் அது இருக்கிறது. நாம் அதை தேவனுடைய வார்த்தையில் இருந்துதான் எடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 14. அநேக நேரங்களில் இப்படிப்பட்ட காரியங்களில் நான் தவறாக இருக்கலாம், எனவே நீங்கள் இதை புரிந்து கொள்ள நிச்சயமுடையவர்களாய் இருங்கள். என்னுடைய வியாக்கியானம் தவறாக இருக்கலாம், ஆனால் நான் அதை கூர்ந்து வாசிக்க முயற்சித்து அது கூறுகின்ற விதமாகவே கூறுகிறேன். சரியாக வேத வார்த்தையோடு தரித்திருந்து அது கூறுவதையே கூறுங்கள். 15. இப்பொழுது அது மிகவும் மோசமாக இருக்கிறது. அல்லது ஒருக்கால் அது தேவனுடைய சித்தமாக இல்லாமல் இருக்கலாம் அல்லது சித்தமாக இருக்கலாம் எனக்கு தெரியாது. அதாவது வாராவாரம் இந்த புத்தகத்தையே பிரசங்கித்து பிரசங்கத்துக் கொண்டு, இங்கே இருந்து கொண்டு, அப்படியே தானியேலின் புத்தகத்திற்குள்ளாக சென்று, தானியேலையும், வெளிப்படுத்தின விசேசத்தினையும் எடுத்து தீர்க்க தரிசிகளோடு இணைக்கப்படுவதை கவனிக்க விரும்புகிறேன். 16. தேவனுடைய வார்த்தை முழுவதும், ஒவ்வொரு துணிக்கையும் சரியாக ஒன்றோடு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அறுபத்தாறு புத்தகங்கள் அநேக மனிதர்களால் நூற்றுக்கணக்கான வருடங்களின் இடைவெளியில் எழுதப்பட்டு, அதில் ஒன்றுகூட மற்றொன்றுக்கு முரணாக இல்லை. ஒன்று கூட இல்லை. அவை ஒவ்வொன்றும் பரிபூரணமாய் இருக்கின்றன. இந்தவிதமாக எந்த ஒரு புத்தகமும் உலகம் முழுவதிலும் எழுதப்படவில்லை. 17. கர்த்தருடைய ஜெபத்தை மாற்றும்படியாக இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனுடன் ஒரு வார்த்தையை கூட்டி அல்லது ஒரு வார்த்தையை அதிலிருந்து வெளியே எடுத்து அதை மேலானதாக ஆக்க முயற்சிக்கின்றனர், உங்களால் அதைச் செய்யவே முடியாது. ஓ... அது பரிபூரணமானது, தேவனுடைய வார்த்தையாக இருக்கின்றது. 18. வேதாகமம் என்பது தேவனுடைய ஏவப்பட்ட வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன். அதின் ஒவ்வொரு வார்த்தையும் ஏவப்பட்டதாய் இருக்கிறது. இது ஏவப்பட்டது அல்ல என்று நான் விசுவசிக்கிறேன், இது ஏவப்பட்டது அது ஏவப்பட்டது, என்று கிடையாது. அது எல்லாமுமாக ஏவப்பட்டது என்று நான் விசுவசிக்கிறேன். ஒன்று அது அனனத்தும் சரியானதாக இருக்க வேண்டும், அல்லது அனைத்தும் தவறானதாக இருக்க வேண்டும். அது எல்லாமும் கலந்ததாக இருக்குமென்றால் அப்பொழுது நமக்கு என்ன செய்வது என்றே அறியாதிருப்போம். ஆனால் அது எல்லாமுமாய் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் சத்தியமாக இருக்கிறது. இங்கே கர்த்தர் உரைக்கிறதாவது என்று எதை கூறியிருக்கின்றாரோ அதற்காக நான் என்னுடைய ஜீவனை இந்த நேரத்தில் பலியாகக் கொடுக்க சித்தமாக இருக்கிறேன். 19. இப்பொழுது அவர்களுக்கு சில இரவுகள் தான் இருக்கிறது. சனிக்கிழமை இரவு நமக்கு ஆராதனை இருக்கப் போகிறது. அப்படியே தொடர்ந்து கூட்டங்கள் இருக்கப் போகிறது. 20. சபை சுத்தமாய் இல்லாததினால், சிலர் அழுக்காய் இருப்பதினால் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு வர முடியாது என்கின்றனர். அவர்களில் சிலர் இப்படிக் கூறுகிறார்கள். "சனிக்கிழமை இரவு ஆராதனைக்கு பின்னர் நாங்கள் இங்கேயே தங்கி சபையை சுத்தப்படுத்த உதவி செய்வோம். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுத்தம்பண்ண யாரும் வரவேண்டியிருக்காது, அல்லது சபையை ஒழுங்குபடுத்தி வைக்க அவர்கள் ஞாயிற்றுக் கிழமை வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நான் ஒரு ஓய்வு நாள்க்காரன் அல்ல. ஆனாலும் என்னால் முடிந்தவரை அவ்வளவு கூர்ந்து ஆராதனை செய்து அதை மதிக்க விரும்புகிறேன். 21. அப்படியானால் நாளை இரவு, ஒருக்கால் கர்த்தருக்கு சித்தமானால் சனி இரவு, எதைக் குறித்து பேச போகிறோம் என்பதை அறிவிக்கலாம் என்று நினைக்கிறேன். 22. இன்றிரவு அது மிருகத்தின் முத்திரையாய் இருக்கிறது. நாளை இரவு அது தேவனுடைய முத்திரையாய் இருக்கும். இந்த நாட்களில் நாம் பேசவேண்டிய மிக முக்கியமான காரியங்களில் இவைகள் இரண்டும் இருக்கிறது. ஏனென்றால் தேவனுடைய நியாயத் தீர்ப்பின் புலானாய்வின் நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கின்றேன். நாம் இப்பொழுது சரியாக அந்த நாளில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் தீவிரமாய் இருக்க விரும்பவில்லை. இதில் வெறியராய் இருக்கவும் நாம் விரும்பவில்லை. வேதம் அதை இங்கே பேசுகிறதைப் போலவே அவ்வளவு தெளிந்த புத்தியோடு நாம் அதை அனுக விரும்புகிறோம். நிச்சயமாக அது பரிபூரணமாக இருக்கிறது. 23. இப்பொழுது, இதை செய்வதில் இன்றைக்கு அநேக ஜனங்கள் மிருகத்தின் முத்திரையைக் குறித்து பேசுவதை நாம் கேள்விப்படுகிறேம். இதை நீங்கள் நீண்டகாலமாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். “அதுதான் என்ன?” அதைச் செய்கிறது யார்? எங்கே? யார் அதை பெற்றுக் கொள்ள போகிறார்கள்? அப்படி அவர்கள் அதை உடையவர்களாய் இருந்தால் அது அவர்களுக்கு செய்யும் போவது தான் என்ன? அதனால் உங்களுக்கு கெடுதல் செய்ய முடியுமா? அதனால் ஏதாவது கெடுதல் உண்டா? 24. இப்பொழுது தேவனுடைய வார்த்தையிலிருந்து அதை தான் நாம் கண்டறிய விரும்புகிறோம். முதலாவது காரியம், வேதத்தில் மிருகத்தின் முத்திரை என்ற ஒன்று பேசப்பட்டிருக்குமானால், அதை அறிய வேண்டும். அடுத்த காரியம், அது எந்த காலத்திற்கு சம்பந்தப்பட்டது. அதைப் பெற்றுக் கொள்ளுகிற ஜனங்கள் யாராக இருப்பார்கள், நீ என்னச் செய்வாய் நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டும்; அதை அறியாமல் இருப்பீர்களா? அதை போன்றதான, அந்தவிதமான கேள்வி, எனவே எனக்குத் தெரிந்த மட்டில் இது மிக முக்கியம் வாய்ந்த காரியங்கள் வேதத்திலிருந்து நான் நினைக்க கூடிய இரண்டு காரியங்கள், ஒன்று மிருகத்தின் முத்திரை, இன்னொன்று தேவனுடைய முத்திரை இவைகள் தான். 25. முதலாவதாக நான் இங்கே எழுதி வைத்திருக்கின்ற, நாம் இப்பொழுது திருப்பக்கூடிய வேத வார்த்தையின் துவக்கமாக மிருகத்தின் முத்திரை என்ன என்று பார்ப்போம். அதைப் பெற்றுக் கொண்டிருப்பது ஆபத்தானதா? அப்படியா? இப்பொழுது வெளிப்படுத்தின விசேசம் 14ம் அதிகாரம் 9ம் வசனம், அது மூன்றாம் தூதனின் செய்தியாய் இருக்கின்றது. 26. நான் இங்கே சகோ ஸ்டான்லி, இன்னும் இரண்டு அல்லது மூன்று போதகர்கள் உட்கார்ந்திருப்பதை காண்கிறேன். லூயிவிலலில் உள்ள பாப்டிஸ்ட் குருமார் பள்ளியில் இருந்து வந்துள்ள சில சகோதரர்கள் நேற்று மாலை இங்கு வந்திருந்தனர். ஒரு வேளை இன்றைக்கும் சிலர் வந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை. ஒருக்கால் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர்கள் யூதர்கள், இவைகளைச் சேர்ந்தவர்கள் இங்கே இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை. 27. இது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இல்லவே இல்லை. வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற பிரகாரமாக, அதை வாசித்து நீங்கள் தாமே அதை காணும்படியாய் செய்ய வேண்டும் என்பதற்காகவே எப்படி செய்ய வேண்டும் என்று நாம் அறிந்த விதத்திலே நிதான புத்தியோடு , நம்முடைய வார்த்தைக்காக அவர் நம்மை நியாயம் விசாரிப்பார் என்று அறிந்தவர்களாய், நாம் அதை அணுகுவோமாக நியாயத்தீர்ப்பின் நாளன்று நம்முடைய வார்த்தைகள் நம்மை ஆசீர்வதிக்கும் அல்லது, ஆக்கினைக்குள்ளார்க்கும். 28. எனக்கு ஏதோ காரியம் தெரிந்து இருக்கிறது. என்று உணர்ந்து, அதை மறைத்து வைத்துக் கொண்டால், அப்பொழுது நியாயத் தீர்ப்பின் நாளன்று நான் அதற்கான கிரயத்தை செலுத்தும்படி தேவன் செய்யப் போகின்றார். ஆத்துமாக்களும் அந்த நேரத்தில் கரத்தை சுற்றிக் காட்டி சகோ. பிரன்ஹாம். "நீர் மட்டும் எங்களிடம் கூறாமல் இருந்திருந்தால் கூறியிருந்தால், நாங்கள் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்'' என்பார்கள். 29. அந்த பழைய பவுலைப் போன்று ''நான் இன்று "எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி இருக்கிறேன். ஏனென்றால் தேவனுடைய ஆலோசயையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று கூற விரும்புகிறேன். அது உண்மை, அதை நான் காண்கிற விதமாக கூறுகிறேன். நான் தவறாக இருந்தால் அப்பொழுது தேவனே என்னை மன்னியும், இந்த காரியம் சும்மா வருவதில்லை. அதாவது நான் எந்த குருமார் பள்ளிக்கும் போகவில்லை. நான் எந்த பள்ளிக்கும் போகவில்லை. இதைக் குறித்து வேறு எவருடைய வார்த்தையையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஜெபத்தோடு நான் நேராக தேவனுடைய வேதாகமத்திற்குள் சென்றேன். பரிசுத்த ஆவியானவராலே இது எனக்கு தெய்வீகமாய் வெளிப்படுத்தப்பட்டது. வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல், தரிசனங்கள் முதலானவைகளை காணும்படி என்னை நடத்துகின்ற அதே தேவனுடைய தூதனால் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. இது உண்மையாய் இருக்குமா? அல்து இல்லையா? என்று நீங்கள் இதைக் கொண்டு நிதானிக்கலாம். 30. மூன்றாவது தூதனால் உலகத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியாய் இது இருக்கின்றது. மூன்றாவது தூதனின் செய்தி என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது இந்த நாளில் போய்க் கொண்டிருக்கிறது. இது மூன்றும் தூதனின் செய்தியின் பரப்புதலாக இருக்கிறது என்பதை நீங்கள் வேத வாசகர்களாய் இருந்தால் அறிந்து கொள்வீர்கள். 31. அங்கே மூன்று வாதைகள் அதை பின் தொடர்ந்தது, முதலாவது வாதை முதலாம் உலயுத்தத்தின் போது சம்பவித்தது. இரண்டாவது வாதை இரண்டாம் உலக யுத்தத்தின் போது சம்பவித்தது, இப்பொழுது நாம் எதற்குள்ளாகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். சரி நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். 32. நாம் வேத வார்த்தைகளை வாசிப்பதற்கு முன்பாக, இதை நம்முடைய சிந்தையில் கொள்வோமாக, வேதாகமத்தின் பிரகாரமாக பார்க்கும் போது நாம் காலத்தின் முடிவில் இருக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். எவ்வளவு காலம்? எனக்குத் தெரியாது. ஒருவருக்கும் தெரியாது. ஆனால் கவனியுங்கள் 33. வரலாற்று பிரகாரமாய் பேசுகின்றதை நாம் எடுத்துக் கொள்வோம். முதல் இரண்டாயிரம் வருஷங்களில் உலக ஒழுங்கு அமைப்புகள் ஒரு உச்சக் கட்டத்திற்கு வந்தது. தேவன் உலகத்தை தண்ணீரால் அழித்தார். உங்களுக்கு அது தெரியுமா? பின்னர் அது ஒரு புது உலகம் போன்று வெளிவந்தது. இரண்டாவது இரண்டாயிரம் வருடங்கள் முடிந்ததும் அது மீண்டுமாய் அதன் முடிவிற்கு வந்தது தேவன் இயேசுவை அனுப்பினார். அது சரிதானே? இது அடுத்த இரண்டாயிரத்தின் முடிவாய் இருக்கிறது, 1954. சுவிசேஷத்தில் இயேசு கூறினார், "அந்த வேளைகள் குறைக்கப்படும்" என்றார், எதற்காக? தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாக இல்லையென்றால், ஒருவரும் தப்பிப் போவதில்லை, "என்று அது அவ்வளவு கொடியதாக இருக்கும். எனவே நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். பின்னர் ஏழாவது பாவனையில் அது ஆயிர வருடங்களாக இருக்கிறது. ஒரு ஆயிரம் ஆண்டுகள். 34. தேவன் ஆறாயிரம் வருடங்கள் கிரியை செய்ததைப் போலவே, நமக்குத் தெரியும் பரலோகத்தில் ஒரு நாளானது பூமியில் ஆயிரம் வருடங்களுக்குச் சமம், II பேதுரு புரிகின்றதா? இப்பொழுது தேவன் ஆறாயிரம் வருடங்கள் கிரியை செய்து உலகத்தை உண்டாக்கினார். சபையானது பாவத்திற்கு எதிராக ஆறாயிரம் வருடங்கள் கிரியை செய்தது, ஏழாவது ஆயிரத்தில் தேவன் இளைப்பாறச் சென்றார்; ஏழாம் நாளில் அவர் ஓய்ந்திருந்தார். இப்பொழுது அது ஆயிர வருட அரசாட்சிக்கு பாவனையாய் இருக்கிறது. இதில் சபையானது இங்கே பூமியின் மேல், சரீர உருவத்தில் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு வியாதி, துக்கம், தொல்லை அல்லது மரணம் இல்லாமல் ஜீவிக்கும். அந்த மகத்தான பொன்னான காலம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. “ஓ அதற்காகவே நாம் இருக்கிறோம். எனக்கு அந்தப் பாடலை பிடிக்கும், பூமியானது வேதனை பட்டு கொண்டே அந்த இனிமையான விடுதலையின் நாளுக்காக கதறிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது இயேசுவானவர் மீண்டுமாக பூமிக்குத் திரும்பி வருவார்” எனக்கு அது பிடிக்கும். இயேசு கிறிஸ்துவின் மகிமை பொருந்திய ஆயிர வருட சமாதான ஆட்சியில், இந்த இருண்ட உலகத்தின் பாவமும், துன்பமும், வேதனையும், மரணமும், இல்லாமல் போகும். அவர்கள் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள், ஆயிர வருட அரசாட்சியில் அரசாண்டார்கள். கர்த்தரின் வருகைக்கு சற்று முன்னதாக, முத்திரையும், அடையாளமும் போடுவதற்கு முன்னதாக, இந்த மூன்றாம் தூதனின் செய்தி இருக்கும், இப்பொழுது அங்கே ஒரு மகத்தான கூட்டு சேர்தல் இருக்கப் போகின்றது. 35. நான் சிறு பையனாக இருந்த போது நாங்கள் மேற்கு திசையில் மாட்டு மந்தையை சுற்றி வளைக்க போவது வழக்கம். வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும், மந்தையை சுற்றி வளைக்கச் செல்வதுண்டு. மலைகளுக்கு மேலாகப் போய் மந்தையை கீழாக துரத்துவோம். மந்தை எல்லாவற்றையும் கீழே துரத்திக் கொண்டு வந்த பிறகு எல்லா இடங்களிலும் இருந்து எங்களுடைய மந்தையை சேர்ந்தவைகளை பொறுக்கி எடுப்போம். எங்களுடையதல்லாதவைகளை விட்டு விடுவோம். எங்களுடையவைகளுக்கு அடையாள குறி உண்டு. அவை அடையாளம் போடப்பட்டவை. 36. உங்களில் யாராவது மந்தைக்கு அடையாளம் இடுவதை எப்பொழுதாவது பார்த்ததுண்டா? மந்தைக்கு அடையாளம் போடுவதை பார்ப்பது என்பது ஒருவிதமான காரியம். நான் மாடுகளுக்காக பரிதாபப்படுவேன். அடையாளம் போட துவங்கும் போது அது மிகவும் வேதனை உள்ள குழப்பமாக இருக்கும், அடையாள இரும்பை நன்றாக சூடாக்க வேண்டும், அது என்னுடைய வேலை. மாடுகளை நன்றாக கட்டி படுக்க வைத்திருக்கும் இளங்காளையின் மேல் அந்த சூடான அடையாள கம்பியை அதன் மேல் வைக்க அதன் மயிரும், சதையும் அங்கே வெந்து போகும். அந்த புண் மீது சிறிது தார் பூசுவோம் பின்னர் அதை அவிழ்த்து விடுவேம். அது உண்மையாகவே ஓடிப்போகும். ஆனால் கவனியுங்கள் அந்த மாடு குறிக்கப்பட்டாயிற்று. 37. அந்த விதமாகத்தான் தேவன் நமக்குச் செய்கிறார். நீங்கள் கீழே பீடம் மட்டுமாய் இறங்க வேண்டும். ஓரில் ஒரு பொழுது அப்படியே கட்டி வைக்கப்படுவீர்கள், ஆனால் சகோதரனே பரிசுத்த ஆவியானவர் மட்டும் உன் மேல் அடையாள குறியை போட்டு விட்டாரானால், நீங்கள் ஒருக்கால் சிறு ஓட்டமும், கூச்சலும் போடலாம். ஆனால் நீங்கள் குறிக்கப்பட்டுவிட்டீர்கள். அது சரியே. நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், நீங்கள் எதைச் சேர்ந்தவர்கள் என்பதை உரிமையாளர் வரும்போது அவர் அறிந்து கொள்வார். கரடு முரடானவைகள் மத்தியில் இருந்தும் ஆக்கினை தீர்ப்பிலிருந்தும் திரும்பிக் கொண்டு வரப்படும். 38. இப்பொழுது அடையாள குறிபோடும் நேரம். இதில் சவாரி செய்பவர்கள் இரண்டே பேர்கள் தான். அவர்கள் தேவனும், சாத்தானுமே. சாத்தான் அவனுடையவர்களை எடுத்துக் கொள்வான், தேவன் அவருடையவர்களை எடுத்துக் கொள்வார். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு, யார் சாத்தானுடைய அடையாளக் குறியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்றிரவு பார்க்கப்போகிறோம். நாளை இரவு யார் தேவனுடைய அடையாளக்குறியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கப் போகிறோம். 39. தூதனின் செய்தி இங்கே இருக்கிறது. வெளி சுவிசேஷம் 14ம் அதிகாரம் 9ம் வசனம். நான் இங்கே எழுதி வைத்திருக்கும் ஒரு சில வசனங்களை வாசிப்போம். அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கி தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்கிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 40. நிச்சயமாக அதனோடு எந்த காரியமும் நமக்கு வேண்டாம் கவனியுங்கள். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொருபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்கிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. 41. அதனோடு எனக்கு எந்த காரியமும் வேண்டாம். நான் நிச்சயமாய் கூறுகிறேன். ஆம் நாம் பார்த்துக் கொண்டிருக்கையில் அடுத்த வசனத்தைப் பாருங்கள் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். 42. இப்பொழுது 15ம் அதிகாரம் 2ம் வசனம், இப்பொழுது கவனியுங்கள், 15ம் அதிகாரம் 2ம் வசனம். நாம் 14ம் அதிகாரம் 9வது வசனம் முதல் வாசித்துக் கொண்டு வருகிறோம். இப்பொழுது 15ம் அதிகாரம் 2ம் வசனம் நாம் 14ம் அதிகாரம் 9வது வசனம் முதல் வாசித்துக் கொண்டு வருகிறோம். இப்பொழுது 15ம் அதிகாரம் 2ம் வசனம். முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொருபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுடாயிற்று. 16ம் அதிகாரம் 2ம் வசனம் (மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவர்களுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே.) 43. மன்னிக்கவும் நான் பக்கத்தை திருப்பினேன். இரண்டு பக்கங்களை ஒன்றாய் திருப்பியிருக்க வேண்டும். இப்பொழுது 20ம் அதிகாரம் 4ம் வசனம் முதல் சரி. இதோ இங்கே இருக்கிறது. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத்தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். 44. மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பின்னர் கிறிஸ்துவை ஆராதிப்பதும், அல்லது அவரோடு இருப்பதும் முடியாது, ஆனால் மிருகத்தை அல்லது மிருகத்தின் சொரூபத்தை வணங்குகிறவர்கள் யாராயிருந்தாலும் சரி தேவனுக்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வாதிக்கப்படுவார்கள். அதைப்பற்றி கர்த்தர் அப்படித் தான் கூறுகிறார். 45. இப்பொழுது நாம் ஆரம்பிக்கப் போகிறோம். நீங்கள் வேதாகமத்தை வெளிப்படுத்துதல் 13க்கு திரும்பவும், நாம் இன்னும் சில வினாடிகளில் துவங்குவோம். இப்பொழுது இது மிகவும் முக்கியமானது, கூர்ந்து கவனியுங்கள். 46. முதலாவதாக கடந்த இரவில் இருந்து நாம் நம்முடைய பொருளை எடுக்க விரும்புகிறோம். கடந்த இரவு நாம் சபை காலங்களை குறித்து தியானித்தோம். இயேசுவானவர் எப்படியாக அவருடைய சபையில் நின்று கொண்டு பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்று பேசிக் கொண்டிருந்தார் என்று பார்த்தோம். அவருடைய தலைமயிர் வெண் பஞ்சைப் போன்றும், அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போன்றும் இருந்தது. 47. நினைவிருக்கட்டும் வெளிப்படுத்தின விசேசம் ஒரு தரிசனமே அது மேலோட்டமாய் இருக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருந்தது. எனவே நீங்கள் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். தீர்க்கதரிசனங்ளை வாசித்துப் பார்த்து அந்த அடையாளங்களின் அர்த்தம் என்னவென்று பாருங்கள். அதன் பிறகு அதை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள் அதனால் அடையாளங்களின் உண்மையான அர்த்தம் என்னவென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 48. அக்கினி ஜீவாலையைப் போன்று கண்களை உடையவராய் பூமியின் ஊடாகப் போவதும் வருவதுமாய் ஓடிக் கொண்டிருந்தது, “அக்கினி ஜீவாலைகள்" என்று பார்த்தோம். அது அவருடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயம், அது சபையின் வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தை என்று நாம் கண்டறிந்தோம். கணுக்களையும், ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருந்தது. எபிரேயர் 4ம் அதிகாரம். 49. தன்னுடைய அழகிலே நின்று கொண்டிருக்கிற சபையை நாம் கண்டறிந்தோம், கிறிஸ்து தம்மை அதற்குள்ளாக வார்ப்பித்துக் கொண்டார். சபை "வெண் வஸ்திரத்தை உடையதாக இருந்தது. கவனியுங்கள் அது ஒரு ஸ்திரியாய் இருந்தது. [வெளி : 1 : 13] மார்பை சுற்றி அவளுடைய வெட்கத்தை மறைக்க வஸ்திரத்தால் மூடியிருந்தாள், அவள் ஒரு பொன் கச்சையை சுற்றி கட்டிக் கொண்டிருந்தாள் அது மார்பை சுற்றி வஸ்திரத்தை இறுக பற்றிக் கொண்டிருந்தது. "வெண்மை" அது கிறிஸ்துவின் நீதியை குறித்துப் பேசுகிறது. அந்த பொற்கச்சை சுவிசேஷத்திற்கு பிரதிநிதித்துவமாய் இருக்கிறது. சுவிசேஷத்தை பிரசங்கித்தல், பரிசுத்த ஆவியையும், கிறிஸ்துவின் நீதியையும் சபையின் மேல் கொண்டு வருகிறதாய் இருக்கிறது. அங்கே அதை பற்றி பிடிக்கிறது. கச்சையின் பொற்கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது. 50. பின்னர் அவர் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போல் இருந்த பாதங்களின் மேல் நின்று கொண்டிருந்தார். வெண்கலம் என்பது தெய்வீக நியாயத்தீர்ப்பைக் குறித்து காட்டுகின்றது. தேவன் தாம் எடுத்துக் கொண்டதான அவருடைய மகத்தான உறுதி பிரமாணத்தை காத்துக் கொள்ளும்படியாக அவர் கிறிஸ்துவை அனுப்பினார். கிறிஸ்துவானவர் அந்த தெய்வீக நியாயத் தீர்ப்பின் கிரயத்தை செலுத்தினார். கிறிஸ்துவானவர் சபையின் ஸ்தானத்திலே நின்று கொண்டிருக்க, [சபையானது அதன்பின்னர் தெய்வீக நியாயத் தீர்ப்பின் அடிப்படையின் மேல் இருக்கிறது.] ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறது என்ன ஒரு அருமையான காட்சியாய் இருக்கின்றது. 51. பின்னர் முதல் சபையின் காலத்தில் அவர்களுக்கு என்ன இருந்தது என்று நாம் கண்டறிந்தோம். நேற்று இரவு எத்தனைபேர் இங்கு இருந்தீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் காணட்டும். அது அருமையாய் இருக்கிறது. முதலாம் சபையான எபேசு சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருந்தனர் என்று கண்டறிந்தோம். அவர்கள் தண்ணீரினால் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். எல்லாவிதமான அடையாளங்களும், அற்புதங்களும் விசுவாசிகளை பின் தொடர வேண்டியதாய் இருந்தது. 52. எப்படியாய் ஒவ்வொரு சபைக் காலத்திலும் அது மங்கிப் போகத் துவங்கியது. இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று, பின்னர் இருண்ட காலத்தில் ஊடாக சென்று, ஒரு கள்ள நாமத்தோடும் ஒரு கள்ள ஞானஸ்நானத்தோடும் அவர்கள் வெளியே வந்தார்கள். தண்ணீர் பரிசுத்த ஆவி இரண்டுமே. 53. பிறகு அவர்கள் அப்படியே தொடர்ந்து வந்து சிறிது காலத்திற்குப் பின் வெளிச்சத்தை பெற்றனர். அதன்பின்னர் திறக்கும்படியாக அங்கே ஒரு வாசல், பிலடெல்பியா சபையின் காலத்திற்கும், லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இடையே வைக்கப்பட்டிருந்தது. 54. அதற்கு பின்னர் லவோதிக்கேயா வெது வெதுப்பாகி முற்றிலுமாய் அதனின்று தேவனே அவருடைய வாயில் இருந்து வாந்தி பண்ணிப் போடும் அளவிற்கு வெளியே சென்றது. அது சரி, அது வேத வாக்கியங்களாய் இருக்கின்றது. 55. எந்த ஒரு வரலாற்றுக்காரனும், எந்த ஒரு ஆசாரசபை விசுவாசியும் வேதாகமம் கூறுகின்றபடியே அந்த ஏழு சபை காலங்களும் அல்லது ஏழு பொன் குத்து விளக்குகளும், ஏழு சபை காலங்கள் என்று அறிந்திருக்கிறான். பழைய ஏற்பாடு வெளியே சென்றது போன்று அது இங்கே புதிய ஏற்பாட்டிற்கு பாவனையாய் இருக்கின்றது. 56. ஆனால் புற ஜாதியாரின் காலத்தின் முடிவுக்கு முன்னதாகவும் யூதர்கள் மீண்டுமாய் அதை பற்றிக் கொள்வதற்கு முன்னதாகவும் அங்கே மகத்தான ஒரு அசைவும் ஒரு எழுப்புதலும் உண்டாயிருக்கிறது. 57. நினைவிருக்கட்டும், புற ஜாதியாருக்கு கிருபையாக கொடுக்கப்பட்ட நேரம் வரம்புக்கு உட்பட்டதாக இருக்கிறது. “அவர்கள் எருசலேமின் மதில்களை இடித்துப் போடுவார்கள் புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் இவ்விதமாய் இருக்கும்” என்று வேதாகமம் கூறுகிறது என்று இயேசு கூறினார். அது சரி. அது முடிவதற்கு குறிப்பிட்ட அளவு நேரம் அதற்கு இருக்கிறது. 58. அங்கே அவர்கள் அப்போது செய்த காரியங்களை நாம் கண்டறிந்தோம். அடையாளங்களும், அற்புதங்களும் அவர்களை பின் தொடர்ந்தன என்றும், எவ்வளவு அற்புதமாய் அது இருந்தது என்றும் நாம் கவனித்தோம் அதன்பிறகு வெளிச்சம் மேலும், மேலும் மங்க துவங்கியது. பின்னர் முடிகின்ற அந்த வேளையிலே, இன்னொரு திறந்த வாசல் சபைக்காக அஙகே வைக்கப்பட்டிருந்தது. நாம் அதற்குள்ளாக போவதற்கு முன்பாக, இங்கே சற்று நிறுத்துவோம். கவனிக்கவும், என்னுடைய சிந்தையில் இன்னொரு தீர்க்கதரிசனம் அதை நாம் எடுப்போம் இங்கே தீர்க்கதரிசி கூறுகிறான், ஒரு நாள் உண்டு அது பகலுமல்ல அது இரவும் அல்ல என்று 59. (அதிக சத்தமாய் பேசுகிறேனா?) கூடுமானால் அதை தேவைக்கு ஏற்றவாறு திருப்பிக் கொள்ளுங்கள் எனக்கு அது தெரிகிறது. அது எதிரொலிக்கிறது என்று, அதன் காரணமாகத்தான் நான் சற்று சத்தமாகப் பேசுகிறேன். அதனால் பின்னால் இருப்பவர்களால் நன்றாக கேட்க முடியும், ஏனென்றால், இது மிகவும் முக்கியமானது. 60. ஒரு நாள் உண்டு, அது பகலும் அல்ல, இரவும் அல்ல" என்று தீர்க்கதரிசி கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், வெளிச்சமாய் இராது, ஆனால் மந்தாரமாய் இருக்கும், பாருங்கள் அது மப்பான நாள் "ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாயிருக்கும்'' என்ன ஒரு அருமையான காட்சி. 61. இந்த மப்பான நாளின் மேல் பொழுது விடியும் பொழுது, அதாவது அங்கே யுத்தங்களும், தொல்லைகளும், உயர்வுகளும், தாழ்வுகளும், காலங்களும் சபைகளும் இசங்களும் மற்ற காரியங்களும் உண்டாயிருக்கும், அது வெளிச்சமாய் இராது, இருளாயும் இராது. அங்கே ஒரு தேவன் இருக்கிறார். அங்கே ஒரு சுவிசேஷம் இருக்கிறது என்று அறிவோம், ஆனால் அவர்களால் அதன் ஊடாக காணமுடியாமல் இருக்கும். அப்படிப்பட்டதான ஒரு நேரம், நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? அப்போழுது பெந்தேகோஸ்தயின்போது அவர்கள் அதைச் செய்தார்கள். அவர்கள் அதை ஆதிசபையிலே செய்தார்கள், அவர்களிடத்தில் அந்த அடையாளங்கள், அற்புதங்கள் இருந்தது என்று வேதாகமம் கூறுகிறது. "ஆனால் நம்முடைய சபை அதை போதிப்பது இல்லை” என்று அவர்கள் கூறுவார்கள். பாருங்கள் அது மந்தாரமானது, இருளும் அல்ல, வெளிச்சமும் அல்ல, ஆனால் அப்படி இருந்தும் நாங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது இரண்டாவது வருகையில் விசுவாசம் வைத்திருக்கிறோம். அவர் வருகிறார் என்றும் நாங்கள் அறிவோம்” என்பார்கள். 62. வேதாகமம் கூறகிறது, "அது பிரகாசமுமாய் இராது, இருளாயும் இராது'' என்று, அதைப் பகல் என்று உங்களால் அழைக்க முடியாது, அதை இரவென்று உங்களால் அழைக்க முடியாது. ஆனால் கவனியுங்கள் "சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகி இருக்கும் " சாயங்கால நேரத்தில். 63. வேதாகமம் ஒரு கிழக்கத்திய புத்தகம், ஆதிச்சபையின் மேல் முதலாவது வெளிச்சம் உதயமான போது, அதாவது எபேசு சபையிலே, அங்கே என்ன சம்பவித்தது என்பதை கண்டோம் நமக்கு நினைவிருக்கிறது. பரிசுத்த ஆவியானது முதலாவதாக ஊற்றப்பட்டதின் மூலமாக தேவனுடைய வெளிச்சமானது இயேசு கிறிஸ்துவை ஊடாக கொண்டு வந்தது. அது எல்லா உலகத்திற்கும் வெளிச்சத்தைக் கொடுத்து வேதாகமத்தை எழுதினது. அது சரிதானே? 64. இப்பொழுது அவர் அதை மேற்கத்திய உலகத்தின் மேல், வாக்களித்து இருக்கிறார், கிருபையின் காலத்தின் துவக்கத்தில் சூரியன் கிழக்கே உதித்தது. இப்பொழுதோ மேற்கில் மேற்கத்திய ஜனங்களின் மேல் அது அஸ்தமனமாகிறது. நாம் தான் மேற்கத்திய ஜனங்கள். ஒரு எழுப்புதல் உண்டாகி இருக்கும் என்றும், சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாயிருக்கும் என்றும் அவர் வாக்களித்திருக்கிறார். நாம் இங்கே தான் இருக்கிறோம். ஒளியானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. “இருளானது அதைப்பற்றிக்கொள்ளவில்லை”. அது தான் காரியம், நற்கிரியைகளைக் காட்டிலும், பொல்லாத கிரியைகளைச் செய்ய ஜனங்கள் விரும்புகின்றனர். 65. ஆனால் அக்கரையில் அது அடிவானத்தின் மேல் விழும்படியாய் இருக்கிறது. என்ன சிறிய வெளிச்சத்தைநாம் கொண்டிருக்கிறோமோ, அதை பற்றிக் கொண்டிருப்போம். கவனியுங்கள் அங்கே கிழக்கே யூதர்கள் மேல் எழும்பின அதே சூரியன் இப்பொழுது புறஜாதியார் மேல் அமர்கிறது. இங்கே எல்லாக் காலங்களின் ஊடாகவும், இந்த இரண்டாயிரம் வருடங்களின் ஊடாகவும் அவர்களுக்கு இதுவும், அதுவும், ஸ்தாபனங்களும் கொடுக்கப்பட்ட காலவரம்புகளும், இதுவும், அதுவும் என்றிருந்தது. தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். என்று கூட ஜனங்களுக்கு தெரியவில்லை . 66. ஆனால் "சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாயிருக்கும்'' என்று தேவன் தீர்க்கதரிசிகளின் மூலமாகவும், வேதாகமத்திலும் வாக்களித்திருக்கிறார் "சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாயிருக்கும்," நாம் இங்கே தான் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. எல்லா இயற்கையும் அந்த நாளுக்காக தவித்துக் கொண்டும் கதறிக்கொண்டும் இருக்கிறது. கவனியுங்கள். 67. ஆதி முதல் சபையிலே அவர்கள் எதை உடையவர்களாய் இருந்தார்கள். என்பதை நாம் கண்டறிந்தோம். அவர்கள் அந்நிய உபதேசங்களை, போதனையாக கொண்டிருந்தனர். முதலாவதாக போதனையாக இருந்து பிறகு அது "கிரியைகளாக'' ஆனது. “நிக்கோலாய் மதத்தினரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்” என்று அவர் கூறினார். 68. நிக்கோலாய் என்பது என்னவாய் இருக்கும் என்று வியக்கின்றேன். வரலாற்றையும் நேர்த்தியான விமர்சனங்களையும் மீண்டும் மீண்டுமாகவும் ஊடாகவும் ஆராய்ந்து பார்த்து என்னால் அது என்னவென்று அறிய முடியவில்லை ஒருவராலும் அதை அறிய முடியாது. நிக்கோலாஸ் என்ற மனிதனால் துவக்கப்பட்ட ஒரு போதனையாக இருக்கலாம் வழி விலகிப்போன அப்போஸ்தலர்களில் ஒருவனாக அது இருக்கலாம். அவன் ஒரு கொள்கையை அல்லது ஏதோ ஒன்றை அமைத்திருக்கலாம் அங்கிருந்து நிக்கோலாய் துவங்கியது முதலாவதாக அது கிரியைகளாக இருந்தது, எபேசுவில் எவைகள் கிரியைகளாக இருந்ததோ அவைகள் அடுத்த சபை காலத்திலே ஒரு கொள்கை ஆகிவிட்டது. அதற்கு பின்னர் இருண்ட காலங்களில் உபத்திரவத்திற்குள் சென்றது. 69. முதலாம் சபையில் துவங்கிய அதே நிக்கோலாய் கொள்கை முதல் மூன்று அல்லது நான்கு சுற்று அப்போஸ்தலர்களுக்கு பின்னர், அது ஒரு கிரியைகளானது. "சரி ஒருக்கால் அது இதுவாக இருக்கலாம்” என்று அவர்கள் சிந்திக்க துவங்கினர். அது எப்படி வெளியே வந்தது என்று உங்களுக்கும், வேத வாசகர்களாகிய உங்கள் யாவருக்குமே தெரியும். 70. அது கி.பி.600 அல்லது 360ல் துவங்கினது. கான்ஸ்டன்டைனின் மனமாற்றம் என்று அதை அவர்கள் அழைக்கின்றனர். அவன் மனமாற்றம் அடையவே இல்லை. மனிதன் செய்யக்கூடிய எல்லா அசுசியான காரியங்களையும் அவன் செய்தான். அவன் மனம் மாறவில்லை. அது சரியே, மார்க்க சம்பந்தம் என்று அவன் செய்த ஒரே காரியம் என்னவென்றால் பரிசுத்த சோபியாவின் சபைக்கு மேலாக ஒரு சிலுவையை வைத்தான் அவ்வளவுதான், பரலோகம் செல்வதற்காக அதைப் போன்ற ஏதோ ஒரு காரியம் என்று சொல்லலாமா? சரியா? அவன் கிறிஸ்தவர்களிடம் நான் “போரில் வெற்றி கண்டால் ஒரு கிறிஸ்தவனாக ஆகிவிடுவேன்" என்று கூறினான். அவர்கள் ஜெபித்தார்கள். அவன்போய் போரில் ஜெயம் கொண்டான் அவன் திரும்பிவந்து "சரி நான் சபையை சேர்ந்து கொள்வேன்" என்றான். இன்றைக்கு உள்ள வெது வெதுப்பான சபை அங்கத்தினர்களுக்கு ஒரு அழகான பாவனையாக இருக்கிறது. அது சரி சிலுவையை எடுத்து சபையின் மேல் பொருத்தினான். 71. அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டியஸ், கான்ஸ்டன்ஸ்-டினோப்பிள், அவர்கள் பிரிந்து கிழக்கு, மேற்கு ரோமாபுரி ராஜ்யங்களானார்கள். இந்த காலங்களில் அது துருக்கி சாம்ராஜ்யமானது. 72. அதற்கு பின்னர் அவர்கள் சுமார் இரண்டாவது அல்லது மூன்றாவது நான்காவது சுற்று அப்போஸ்தலர்களின் போது, அவர்களுக்குள் முதலாவதாக காரியம், ஒருவருக்கொருவர் பேதங்கள் உண்டானது, அவர்கள் உடைந்து சிறு சிறு கொள்கைளை உடையவர்களானார்கள். 73. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சபையை எடுத்துக் கொண்டனர். வெஸ்லியின் மெதோடிஸ்ட் சபையானது, தன் ஆதிக்கத்தில் இருந்தது. ஜான் வெஸ்லி அங்கே இருந்தார். லுத்தரன்கள் அவர்களுடைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தார்கள் அப்படியே ஒவ்வொருவரும் இருந்தனர். ஆனால் அதன் ஸ்தாபகர்கள் மரித்த உடனே அவர்கள் வழிவிலகி போய்விடுவார்கள். 74. கர்த்தர் முதலாவதாக அங்கே தோன்றின போது அதைக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை துவங்க அவர்கள் விரும்பினபோது, நான் அங்கே போய் மகத்தான ஸ்தாபர்கரான ட்வைட் மூடி, ஸ்தாபத்த மூடி வேதாகமப் பள்ளியை அங்கே நான் பார்த்தேன், ட்வைட் மூடி இந்த வேதாகமப்பள்ளியைப் பார்க்க கூடுமானால் அந்த மனிதன் எதற்காக நின்றார், இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருப்பதை அவர் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். 75. நான் சொன்னேன், "இங்கே பாருங்கள், வெஸ்லி, கால்வின், நாக்ஸ், பின்னி, ஜாங்கி, இவர்களில் யாராவது ஒருவர் இன்றைக்கு எழும்பி அவர்களுடைய சபை எங்கே இருக்கிறது "என்று பார்த்தால், ஓ என்னே பாருங்கள், முதல் சுற்றில் அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருக்கும் போது, அவன் சத்தியத்தை பற்றிக் கொண்டிருக்கிறான். 76. சீயோன் பட்டணத்தில் இருக்கும் டாக்டர் டோவி-ஐ பாருங்கள், அந்த பட்டணமே தெய்வீக சுகத்தின் அடிப்படையின் மேல் உண்டாக்கப்பட்டு இருக்கும் போது அவர்கள் தெய்வீக சுகத்தையே பரிகசிக்கிறார்கள். ஆனால் டோபி மரித்தபோது பின்னர் வந்தது என்ன? பிளேக், ஜான் லுக் இன்னும் மற்ற எல்லோரும் வந்தார்கள். பின்னர் முதலாவதாக நடந்தது, அசெம்பிளி ஆப் காட் அதற்குள் நுழையும் மட்டாக சுற்றி வந்து முடிவிலே அவர் ஒரு பெரிய கூட்ட சடங்காச்சாரங்கள், எல்லாக் காரியங்களுமாயின. சபையானது நீர்த்துப்போய் பின் வாங்கிப் போய் ஒரு பயங்கரமான நிலைமைக்குள்ளாகிவிட்டது. 77. எனவே நான் இதை கண்டறிந்தேன், அதாவது "தாவீது தன்காலத்திலே தேவனுக்கு நன்றாக ஊழியம் செய்தான்" என்று வேதம் கூறுகின்றது. 78. எனவே நான் சொன்னேன் "கர்த்தாவே, எனக்கு எந்த ஸ்தாபனமும் வேண்டாம், நான் இங்கே ஜீவித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடைய முழு இருதயத்தோடும் உமக்கு ஊழியம் செய்வேனாக," என்று கூறினேன். அது உண்மை. அடுத்தது நான் போன பின்னர் நீர் இன்னொருவனை உடையவராக இருப்பீர், அதன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள நீர் யாரையாவது உடையவராக இருப்பீர். அவ்வளவு தான். 79. வேறொன்றின் மீது கட்ட பிரயாசிக்காதே, அதே நிலத்தின் மீது உன்னால் ஒரு அக்கினியை மூட்ட முடியாது. இஸ்ரவேல் தொடர்ந்து பிரயாணம் செய்ய வேண்டியவனாயிருந்தான். பிரயாணத்தில் அவர்கள் நின்றபோது அவர்கள் பின்வாங்கி போனார்கள் ஒவ்வொரு இரவும் தொடர்ந்து பிரயாணம் செய்ய வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஒவ்வொரு இரவும், புதிய தீயை கொளுத்தினர். தொடர்ந்து போய்கொண்டே இருந்தனர். அதைத்தான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். லுத்தர் என்ன வைத்திருந்தாரோ அது அருமையானது அது அவருடைய காலத்திற்கு உரியதாயிருந்தது, வெஸ்லி என்ன வைத்திருந்தாரோ அது அருமையானது அது அவருடைய காலத்திற்கு உரியதாயிருந்தது, அது அவர்களுடைய நாள், நாமோ இன்னொரு நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், இப்பொழுது நாம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறோம். நமக்குப் பின்னாக ஒரு நாள் இருக்குமானால் இந்த விதமாகவே அதுவும் வரும், ஆனால் நாமோ வெளிச்சம் இங்கே இருக்கும் போதே வெளிச்சத்தில் நடப்போமாக. 80. இதை நான் கவனித்தேன் அதாவது, உடைந்து, ஒரு கூட்ட கொள்கைகளாக ஆவதற்கு முன்னதாக, முதலாவதாக ஒரு உபதேசமாய் இருந்தது. அதற்கு பின்னர் ரோமர்கள் மதம் மாறினார்கள். ரோமர்கள் முதலாவதாக இராஜீயத்தை மகத்தான அலெக்சாண்டருடைய வீழ்ச்சிக்குப் பின்னர், புறகாதியாரின் உலகத்தை கிரேக்கர்களிடமிருந்து முதலாவதாக ஜெயித்த போது ரோம சாம்ராஜ்யம் உலகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் தேசமாக இருந்தது. ரோம ஜனங்கள் புற ஜாதியாரின் காலமாய் இருந்தது. தானியேல் தன் தரிசனத்தில் அந்த விதமாய் கூறி உள்ளான். இன்னும் சில நிமிடங்களில் நாம் அதை குறித்து பேசுவோம். ஆனால் ரோமாபுரி எப்பொழுதும் உலகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தியாய் இருந்தது. 81. பின்னர் அங்கே அவர்கள் தங்களை ஒரு சபையாய் ஸ்தாபித்துக் கொண்டார்கள் என்று பார்க்கிறோம். ஒரு கூட்ட ஜனங்கள் ஒன்று சேர்ந்து சுமார் அறுநூற்றி ஆறு (606) பேர்கள் தங்களை "முற்பிதாக்கள்" என்று அழைத்துக் கொண்டனர். அதாவது “சபையின் பிதாக்கள்” என்று அழைத்துக் கொண்டனர். ஜனங்கள் குழுக்களாக ஒன்று கூடி, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூடி ஆலோசனை செய்து, பின்னர் அவர்களும் ஒரு ஸ்தாபனமாக ஆக்கிக் கொண்டனர். 82. இப்பொழுது நான் கூறுகிறேன் கேளுங்கள், என்னுடைய அருமையான கிறிஸ்தவ நண்பர்களே, புரோட்டஸ்டன்ட், கத்தோலிக்கர் இருவரையும், என்னுடைய கத்தோலிக்க நண்பர்கள் இங்கு அமர்ந்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். உங்கள் உணர்ச்சிகளை புண்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதை கூறவில்லை, ஏனென்றால் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கேளுங்கள், நாம் பிரன்ஹாம் ஜெப கூட்டாரத்தாரையும் அதில் சேர்த்துக் கொள்வோம். ஒரு நிமிஷம் பொறுமையாக இருங்கள். கூறப்பட்டிருக்கும் வண்ணமாக நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அது எந்த இடத்திலும் சரி, யோவான் கூறுகிறான்." கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது, சிராய்ப்புகள் எங்கே வேண்டுமானாலும் பறக்கட்டும், அது சரி, மரங்கள், மற்றவைகளை அவன் வெட்டியாக வேண்டும். 83. ஆனால் பாருங்கள் முதலாவது சபையை அவர்கள் அங்கே ஸ்தாபித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒன்று கூடி முதலாவது சபையை ஸ்தாபித்து அதை பொது உலக சபை அல்லது ரோமாபுரியில் உள்ள கத்தோலிக்க சபை என்று அழைத்தார்கள். கத்தோலிக்கர்கள் அதை தாய்ச்சபை என்று கூறுகின்றனர். அது முற்றிலுமாக அப்படியே உண்மையாக இருக்கிறது. அது ஸ்தாபனங்களின் தாய்ச்சபை சரியாக அப்படியே, எல்லா உலக வரலாற்றிலும் அது தான் முதல் முறையாக சபையாக ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும். காலத்தின் துவக்கம் முதல் இப்படியாய் இருந்ததே இல்லை. 84. இஸ்ரவேலின் நாட்களில் அவர்கள் ஒரு ஸ்தாபனமாக ஆகவில்லை. அவர்கள் ஒரு இனமாக இருந்தார்களே ஒழிய ஒரு ஸ்தாபனமாக இருந்ததில்லை. இயேசு கிறிஸ்து எந்த ஒரு சபையையும் ஸ்தாபிக்கவில்லை. அப்போஸ்தலர்கள் எந்த ஒரு சபையையும் ஸதாபிக்கவில்லை அப்போஸ்தவர்களுக்கு பின் சுமார் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு பிறகு அவர்கள் ஒரு சபையையும் ஸ்தாபிக்கவில்லை. நீங்கள் வரலாற்றைக் கொண்டு அது எங்கே ஸ்தாபிக்கப்பட்டது என்று உங்கள் விரலைக் கொண்டு சுட்டிக் காண்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஜோஸிபஸ், இன்னும் எனக்கு தெரிந்த பிரபலமான சரித்திரக்காரர்களின் விரிவுரைகளை வாசித்திருக்கிறேன். நான் இந்த சொற்தொடரை ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக நான் கூறுகிறேன். ஏனென்றால் அதனால் நான் நிச்சயமுள்ளவனாக இருக்க வேண்டும். நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்களோ அதில் நிலைத்திருக்கவும், நிரூபிக்கவும் கூடியவர்களாய் இருக்க வேண்டும். அது சரியே ஸ்தாபனம் என்ற ஒன்று இருந்ததே கிடையாது. 85. பரிசுத்த பேதுரு கத்தோலிக்க சபையை ஸ்தாபிக்கவே இல்லை. அது சம்பந்தமாக ஒரு சரித்திர அல்லது ஒரு வேத வாக்கியம் ஆதாரமாக காட்டுங்கள் பரிசுத்த பேதுரு ஒரு திருமணமான மனிதன் அவனை போப் என்று கூறுகிறீர்கள். அவன் ஒரு போப்பாக இருந்திருக்க முடியாது. பேதுரு ஒரு திருமணமான மனிதன் "அவனுடைய மனைவியின் தாயார் ஜீரமாய் இருந்து இயேசு அவளை சொஸ்தபடுத்தினார்" என்று வேதம் கூறுகின்றது. எனக்கு தெரிந்தமட்டில் பரிசுத்த பேதுரு ரோமாபுரிக்கு போகவே இல்லை. அவன் ரோமாபுரியில் இருந்தான் என்பதற்கு எந்த ஒரு வரலாற்று சான்றும் கிடையாது. அது தவறாய் இருக்கிறது. 86. ஆனால் அவர்கள் ஸ்தாபித்து கொண்டு ஒரு சபையை ஒன்றுகூடி சேர்ந்து அதை பொது உலக சபை என்று அழைத்துக்கொண்டார்கள். அங்குதான் அவர்கள் ஒரு பொதுவான உலக ஜெபத்தை உண்டாக்கினார்கள். அவர்களிடத்தில் ஒரு பரிபூரண இசைவு உண்டாயிருந்தது. எல்லாருமாக ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியதாக இருந்தது, எல்லாருமாக அதே காரியத்தை கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். அதேவிதமான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. 87. அவர்கள் ஒரு சில வேத வார்த்தைகளை உண்டுபண்ணி வேதத்திலிருந்து அவைகளை எடுத்துவிட்டு மற்றவைகளை அங்கே பொருத்தினார்கள். வேதாகமத்தின் புனித புத்தகங்களில் எந்த இடத்திலும் உத்திரிக்கும் ஸ்தலம்' என்ற ஒன்று கிடையாது. “மரியாளே வாழ்க” என்ற ஒன்றும் இல்லை. அதைப் போன்று ஒன்றுமே அங்கு இல்லை. வேதாகமத்தில் எல்லா இடத்திலும் அவைகள் எப்பொழுதுமே முரணாகவும், அதற்கு எதிராகவும் இருக்கிறது. எந்த ஒரு நேரத்திலும் அப்படியாக இருந்ததே இல்லை அந்தவிதமாக எந்த இடத்திலாவது வேதாகமத்தில் இருக்குமானால் நாளை இரவே இங்கு வந்து என்னை சரிபடுத்துவதற்கான சிலாக்கியம் உங்களுக்கு இருக்கிறது. அது அங்கே இல்லை, எங்கேயும் இல்லை. உங்களுடைய பாதியாரையோ அல்லது போதகரையோ கூட்டிக் கொண்டு வாருங்கள், வேதவாக்கியத்தில் அந்தவிதமாய் கூறப்பட்டிருப்பதாய் ஒரு வார்த்தையையும் ஒரு இடத்திலும் பார்க்க முடியாது. 88. மக்கபேயர் என்பவர்களால் எழுதப்பட்ட அந்த சிறு புத்தகம் மட்டுமே, அதனோடு கூட சேர்க்கப்பட்டது. அது தேவ ஆவியினால் ஏவப்பட்ட புத்தகம் அல்ல, இந்த புத்தகத்தில் இருக்கின்ற காரியங்கள் தான் அவர்களுடைய வேதத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வேதாகமம் ஒரே புத்தகம், இது ஆதி ஸ்தாபகர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இப்பொழுது நாம் கொண்டிருக்கும் இந்த வேதாகமம் ஆதி சபை சரித்திரக்காரர்களாலும், அல்லது பழைய சடங்காச்சார யூத சபையாராலும் அங்கீகாரம் பெறவில்லை . 89. பின்னர் அதில் நன்றாக கூர்ந்து கவனியுங்கள். கத்தோலிக்கர்களுக்கு நல்ல அடி கிடைத்தது என்று நீங்கள் இப்பொழுது நினைக்கிறீர்களா? ஒரு நிமிடம் பாருங்கள். 90. பின்னர் அவர்கள் ஒரு கத்தோலிக்க சபையை ஸ்தாபித்துக் கொண்டு ஒரு உபத்திரவத்தை துவக்கினார்கள். எல்லாரும், எல்லாவிடத்தும் சபையையும், அரசியலையும், ஆட்சியையும் ஒன்றாக இணைத்து ஒரு அஞ்ஞான ரோமாபுரியிலிருந்து ஒரு போப்பானவரின் ரோமாபுரிக்கு கொண்டு வந்தார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு அஞ்ஞான மூட நம்பிக்கையில் இருந்து அவர்கள் ஒரு கிறிஸ்தவத்துக்கு அவர்கள் விரும்பின சொந்த ரூபத்தில் அதை பற்றிக் கொண்டார்கள். புரிகின்றதா?. ஒரு மனிதன் எழும்பி நின்று எதையும் பார்க்காமல் ஏன் செபிக்கப்படவேண்டும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தார்கள். எனவே அவர்கள் வீனஸ் தேவதையை கீழே இறக்கிவிட்டு அங்கே மரியாளின் சிலையை அதற்கு பதிலாக வைத்தார்கள். அவர்கள் ஜூபிடரை (Jupiter) கீழே இறக்கி பேதுருவின் சிலையை அங்கே வைத்தார்கள். ஆராதிப்பதற்கு ஏதாவது ஒரு சிலையை அங்கே வைத்தார்கள். இப்பொழுதோ ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஒரு பொதுவான உலக ஜெபத்தை செய்தார்கள். அது மாறக்கூடாது என்பதற்காக அந்த செபத்தை லத்தீன் மொழியில் ஏறெடுத்தார்கள். அவர்கள் எப்பொழுதும் அதே ஜெபத்தை செய்வார்கள். 91. ஒரு கத்தோலிக்க பாதிரியோடும் அல்லது எந்த ஒரு கத்தோலிக்கரோடும் வேதாகமத்தின் அடிப்படையின் மேல் உங்களால் விவாதிக்கவோ அல்லது விவாதம் செய்யவோ முடியாது. 92. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் வாலிப பாதிரி அண்மையில் என்னுடைய வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு, புரோட்டஸ்டாண்டுகளாகிய நீங்கள் வேதத்தை வாசித்துவிட்டு வீட்டில் இருந்துவிடுகிறீர்கள். ஆனால் கத்தோலிக்கர்களாகிய நாங்களோ சபைக்கு சென்று ஆராதிக்கிறோம்'' என்று கூறினர். நான் அதற்கு ஆனால் என்ன? அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் எனக்கு அதற்கு பதிலை தாருங்கள். அதற்கு அவர் தேவன் அவருடைய சபையில் இருக்கிறார்'' என்றார். 93. வேதவார்த்தைகளில் ஒரு இம்மிகூட இவ்விதமாக கூறவில்லையே, 'தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார் "என்றேன். தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனிதனும் பொய்யன்'' என்றும் அவர் கூறியிருக்கிறார். 94. ஒரு கூட்ட மனிதர்களாய் இருந்து ஒன்று சேர்ந்து ஆலோசனை பண்ணுவது ஒரு மனிதனுடைய ஆலோசனையை காட்டிலும் அதிக அதிகாரம் உள்ளதாய் இருக்கும் என்று நீர் கருதவில்லையா?" என்றார் அவர். 95. நான் சொன்னேன் இல்லை. அந்த ஒரு மனிதன் ஒருக்கால் தேவனுடைய சித்தத்தை உடையவனாய் இருந்தால், அவன் சத்தியத்தை உடையவனாய் இருக்கிறான் என்றேன், எப்பொழுதும் அது நிரூபிக்கப்பட்டதாய் இருக்கிறது. 96. யோசபாத்-க்கும் மிகாயாவிற்கும் இடையே இருந்தது போன்று கடந்த ஞாயிறன்று அந்த பாடங்களை நாம் பார்த்தோம். மிகாயா அங்கே போனபோது அங்கே நானூறு பேர்கள் நின்று கொண்டு கர்த்தர் உம்மோடு கூட இருக்கிறார். போம் கர்த்தர் உம்மோடுகூட இருக்கிறார் என்று கூறினார்கள். அதற்கு யோசாபாத் வேறு யாராவது இல்லையா"? என்றான். அதற்கு அவன் மிகாயா இருக்கிறான் ஆனால் நான் அவனை பகைக்கிறேன்.'' என்றான். அதற்கு அவன் என்ன கூறுகிறான் என்று கேட்போம்' என்றான் அவன். அவனோ 'நீர்போம் இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சிதறப்பட்டதை கண்டேன்" என்றான். அதற்கு அவன் 'நான் உம்மிடத்தில் சொல்லவில்லையா? என்றான். புரிகின்றதா? 97. அப்படி இருக்க அங்கே யார் கூறினது சரி, அங்கே அந்த மனிதனுக்கு முன்பாக நானூறு பயிற்சி பெற்ற தீர்க்கதரிசிகள் நின்று கொண்டிருக்க, அங்கே ஒரு கந்தையான பரிசுத்த உருளை நின்று கொண்டிருந்தான். அவன் உண்மையானதை உடையவனாய் இருந்தான். அவன் அதை கூறினதால் வாயின் மேல் அடிக்கப்பட்டான் ஆனால் அவன் உண்மையை உடையவனாய் இருந்தான். 98. எனவே ஒரு காரியத்தை குறித்து எத்தனைபேர் கூறுகிறார்கள். எத்தனை பேர்கள் அதையே கூறுகிறார்கள், என்பது ஒரு காரியமல்ல, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே காரியமாய் இருக்கிறது அது உண்மை. தேவனுடைய வார்த்தையை சார்ந்து நிற்கையில் அநேக சமயங்களில் நீங்களே உங்களை சார்ந்து நிற்கவேண்டி வரும் ஆனால் தேவன் கூறின காரியத்தின்மேல் சார்ந்திருக்க நிச்சயமுடையவர்களாய் இருங்கள். 99. அவர்கள் இந்த கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தார்கள். கிறிஸ்தவ உலகத்தில் இன்றைக்கு எல்லா மதங்களிலும் மகத்தான ஆதிக்கம் செலுத்துகிறது கத்தோலிக்க சமயமே, ஆனால் அவர்கள் கூறுகிறார்கள் 'நீங்கள் செய்யவேண்டியதில்லை, நீங்கள் அப்படி செய்வதில்லை '' என்று. 100. நீங்கள் சொல்லுங்கள் 'மாம்சம் புசிக்கக் கூடாது'' என்பதை நீங்கள் எங்கே பெற்றீர்கள்? பாதிரியார் மணந்து கொள்ள கூடாது'' என்பதை நீங்கள் எங்கே பெற்றீர்கள்?. இதை எங்கே பெற்றீர்கள்? 101. நாங்கள் வேதத்தைப் போதிப்பதில்லை சபைதான் சத்தியமாய் இருக்கிறது. வேதாகமம் என்ன கூறுகிறது என்பது காரியமல்ல. சபை என்ன கூறுகிறது என்பதே காரியமாய் இருக்கிறது. 102. ஆனால் தேவனோ! தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனிதனும் பொய்யன் என்று கூறுகிறார். இப்பொழுது நீங்கள் உங்களுடைய தெரிந்து கொள்ளுதலை செய்யவேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். 103. அந்த நிக்கோலாய் இப்பொழுது உபதேசமாகி பின்னர் அது ஒரு உபத்திரவமாய் ஆகிவிட்டது. இப்பொழுது அது இந்த கடைசி நாட்களில் இங்கே வந்திருக்கிறது. பின்னர் அந்த இருண்ட காலத்தின் ஊடாக உபத்திரவத்தின் ஊடாக ஒரு பாலைவனச் சோலையாக வந்தது, அதற்கு பின்னர் ஒரு விட்டுக் கொடுத்தல் உண்டானது. அதாவது முதலாவது சீர்திருத்தத்தின் போது உண்டானது. அதுதான் மார்ட்டின் லுத்தர். மார்ட்டின் லுத்தர் கத்தோலிக்க சபைக்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால் அதன் காரணமாக அவர் அதைவிட்டு வெளியேறி அந்த இராப் போஜனத்தில் பங்கெடுத்தார், அவர்களோ இது கிறிஸ்துவினுடைய சரீரமென்று கூறினர். 104. அவர்; இது கிறிஸ்துவினுடைய சரீரம் அல்ல இது அப்பம் அவ்வளவேதான் என்று லுத்தர் கூறினார். 105. அவர்கள் அது பரிசுத்த யூகோரிஸ்ட், தேவநற்கருணை என்கின்றனர். பரிசுத்த யூகோரிஸ்ட் என்றால் பரிசுத்த ஆவி என்று அர்த்தமாம். நீங்கள் அதை உட்கொள்ளும் போது பரிசுத்த ஆவியை உங்கள் சரீரத்திற்குள்ளா எடுத்துக் கொள்கிறதாக நம்புகிறார்கள் அது தவறானதாகும், பரிசத்த ஆவி என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக இருக்கிறது. 106. பெந்தேகொஸ்தே எனும் நாள் வந்தபோது, ஒரு பாதிரியார் வந்து அவர்களக்கு ஒரு பரிசுத்த நற்கருணையை ஒரு அப்பத்தை அவர்கள் நாக்குகளில் கொடுத்தார் என்றில்லை, அல்லது ஒரு போதகர் மேலே ஏறிவந்து ஏதோ தண்ணீரை அவர்கள் மேல் தெளித்து அவர்களுடைய கரத்தை குலுக்கினார். இந்தவிதமாகவும் இல்லை இல்லை ஐயா. 107. ஆனால் வானத்தில் இருந்து பலமான காற்று அடிக்கின்ற முழக்கம் போன்று உண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த அறையை நிரப்பிற்று. அது வேதவாக்கியம் அதுதான் சரியானது. அந்த சபையில் அதுதான் சம்பவித்தது. வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலும் அதே காரியம் தான் சம்பவித்தது. அங்கேதான் அந்த வெளிச்சம் பிரகாசிக்க தொடங்கியது. இங்கேதான் வெளிச்சம் பிரகாசிக்க தொடங்கியது. 108. இப்பொழுது நான் குறிப்பிடும் வேதவார்த்தைகள் எதின்மேலும் உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால் அதை அப்படியே வையுங்கள் வேதவாக்கியங்களில் அது எங்கே என்று நான் முதலில் குறிப்பிடுகின்றேன். புரிகின்றதா? நிச்சயமாக இப்படியான இந்த குறுகிய நேரத்திலே வழக்கமாக இதனுாடாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது வாரங்கள், மாதங்கள் செல்லும். ஒவ்வொரு வேதவாக்கியமும், அதை ஆராய்ந்து பாருங்கள், ஜனங்களே அவர்களுடைய வேதாகமத்தை எடுத்து பார்க்கட்டும். ஆனால் அது கேள்விக்கேட்கப்பட வேண்டியதாயிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் சரியா? 109. மார்டின் லுத்தருக்கு பின்னர் ஜான் வெஸ்லி வந்தார். 110. மார்ட்டின் லுத்தர் வந்தபோது கத்தோலிக்க கொள்கை முதலான அநேக காரியங்களுடன் வந்தார். அவர் அப்படி ஒரு ஞானஸ்நானத்துடன் வெளியே வந்தார். வெளியில் வந்து ஒரு திரித்துவ ஞானஸ்நானம் கொடுத்தார். அப்படி ஒரு ஞானஸ்நானத்தை வேதாகமத்தில் ஒருவரும் பெற்றதாக இல்லை. அப்படியாய் இருந்தால் வந்து எங்கே இருக்கிறது என்று எனக்கு காட்டுங்கள். அது அங்கே இல்லை. 111. ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படியாய் அவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்ட ஒரே வழி 'நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் ஞானஸ்நானம் கொடுங்கள் நாமத்தினால் அல்ல. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள் என்று. சீஷர்கள் அப்படியே திரும்பிப் போய் எல்லோரையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து, வேறு யாராவது வேறு எந்தவிதத்திலாவது ஞானஸ்நானம் பெற்றிருந்தால் அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக அவர்கள் மறு ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கட்டளை இட்டனர். இதோ, இதனோடு கூட கத்தோலிக்க சபை வருகிறது. 112. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றானென்று எழுதியிருக்கிற ஒரு இடத்தை வேதத்தில் இருந்து எனக்கு சுட்டிக் காண்பியுங்கள், அது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது அல்லவா?. ஞாயிற்றுக்கிழமை இரவு நமக்கு கேள்வி இரவு, அப்பொழுது அதை நான் நன்றாக தெளிவு படுத்துகிறேன். பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் யாராவது ஒருவர் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று வேதத்தில் எங்காகிலும் எடுத்துக் காட்டுங்கள், நான் இந்த பிரசங்க பீடத்தை விட்டு எழுந்து போய் 'நான் ஒரு மாய்மாலக்காரனென்று கூறுகிரேன். வேறு எந்த விதத்திலாவது ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற எவர் ஒருவரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். 113. அது சரியாக அப்படியே இருக்கிறது, வேதாகமும் அதைதான் கூறுகிறது பாருங்கள். நாம் சத்தியத்திற்கு, உண்மைக்குப் பதிலாக தத்துவத்தை எடுத்துக் கொள்கிறோம். இப்பொழுது நீங்கள் வேதவாக்கியங்களை நோக்கி பாருங்கள், சரி சகோ.பிரன்ஹாம் கூறினார் என்று கூறாதீர்கள். இப்பொழுது வேதவாக்கியங்களை நோக்கி பாருங்கள், போய் உங்களுடைய வேத அகராதியை எடுத்து அதை நோக்கி பாருங்கள். 114. சபை காலங்கள் ஒவ்வொன்றும் அவருடைய நாமத்தை உடையதாய் இருந்து இருண்ட காலங்களில் ஊடாக அது வந்தது என்பதை கவனியுங்கள். 115. கவனியுங்கள் அது ஆசார சபையின் அக்காலத்தின் பாவனையாய் இருக்கிறது. யூதர்களுக்கான இருண்ட காலத்தின் போது, ஆகாப் இராஜாவாக இருந்தபோது அவனுக்கு முன்பாக இருந்த அந்த மகத்தான இராஜாவின் அவனுடைய எல்லா அழகான நிலைமைக்குள், இஸ்ரவேலின் இந்த மேன்மைகள் எல்லாவற்றிற்கும் பின்னர் இந்த எல்லைக்கோடு விசுவாசியான ஆகாப் அவனுடைய வெதுவெதுப்பான நிலையில் வந்தான். அவன் போய் இந்த விக்கிரக ஆராதனைக் காரியான இராஜகுமாரியான யேசபலை மணந்து அவளோடு விக்கிரக ஆராதனையை இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்தான், அது உங்களுக்கு நினைவிக்கிறதா?. அதுவே மிக அழகான பாவனைகள். 116. புரட்டஸ்டன்ட் கொள்கையானது ரோமானிய கொள்கையை மணந்து கொண்டபோது அவர்கள் இருண்ட காலத்தின் ஊடாக சரியாக அப்படியே விக்கிரக ஆராதனையை கிறிஸ்தவத்திற்குள்ளாக கொண்டு வந்தார்கள். 117. அது இந்தப் பக்கமாக வெளிவரும் போது கவனியுங்கள். இங்கே உங்களுக்கு என்ன இருக்கிறது பரிசுத்த ஆவிக்குப் பதிலாக இன்னொன்று, ஒரு அப்பம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலான ஞானஸ்நானத்திற்கு பதிலாக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம். அவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பதிலியை வைத்தார்கள். வேதவாக்கியத்தை எடுத்துக் கொண்டு என்னால் ஒன்றன்பின் ஒன்றாக நிரூபிக்க முடியும், பதிலிக்கு பின்னர் பதிலாக என்னால் எடுத்துக் காட்ட முடியும். 118. மார்ட்டின் லுத்தர் அதனுடன் ஒப்புதல் தெரிவித்தார், தொடர்ந்து அதே காரியத்துடன் தான் ஜாண்வெஸ்லி வெளியே வந்து அதனுடன் ஒப்புதல் தெரிவித்தார். வேதாகமத்தில் ஒருவரும் தெளிக்கப்பட்டதாக ஒரு போதும் இல்லை. அப்படிப்பட்டதான ஒரு காரியம் இருந்ததே இல்லை. அப்படிப்பட்டதான ஒரு காரியமோ, கட்டளையோ அல்லது அதிகாரப்பூர்வமான உத்தரவோ வேதத்தில் இல்லவே இல்லை, ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கிறீர்கள். அது சரி, நீங்கள் அதை அனுமதிக்கிறீர்கள் அவர்கள் வந்து, உப்பை எடுத்து குலுக்கி, அதை உங்கள் மேல் தெளிக்கிறார்கள் ஏன்? கத்தோலிக்க சபை அதை துவங்கியது. நீங்கள் அதற்கு தலைவணங்குகிறீர்கள். சரியா. 119. அன்றொரு நாள் ஒருவன் என்னிடம் நீர் கத்தோலிக்கர் அல்லாதவன்'' என்றான். 120. அதற்கு நான் இல்லை சகோதரனே நான் ஒரு புரோட்டஸ்டன்ட் நான் அந்த காரியத்திற்கு மறுப்பு தெரிவிப்பவன்'' அதுசரி. ஒரு சுவிசேஷக ஊழியன் என்ற முறையில் பரலோகத்திற்காக என்னுடையவர்களாக இங்கே இருக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுடன், நான் அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டியவன். அற்புதங்களோடும் அடையாளங்களோடும் அவர்களுக்கு முன்பாக ஒரு போதகராக உட்காரவேண்டியவன், அப்படி இருந்து கொண்டு உண்மையான ஒன்றுக்காக நான் நிற்கவில்லையென்றால் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருக்க வேண்டும். நான் சொன்னேன் ஆம் ஐயா என்னை கொன்றாலும் அதற்காக நிற்பேன்" என்று. நான் அப்படித்தான் செய்யப்போகிறேன், வேதம் என்ன? என்பதை அது அப்படியே போதிப்பேன். 121. எந்த நேரத்திலும் அதைக்குறித்து யாரோடும், விவாதிக்க நான் ஆயத்தமாய் இரக்கிறேன் பாருங்கள். அவர் ரோமாபுரியின் போப்-பாக இருக்கட்டும். அல்லது யாராவது இருக்கட்டும் அல்லது யாராவது வேண்டுமானாலும் இருக்கட்டும் நான் விவாதிக்க ஆயத்தமாய் இருக்கிறேன் புரிகின்றதா?. ஆம் ஐயா அதுசரி. நான் தவறு என்றால், வந்து எனக்கு காட்டுங்கள். இப்பொழுது நான் தவறல்ல, ஏனென்றால் வேதவார்த்தைகளையே குறிப்பிட்டு காட்டுகிறேன். நான் உங்களுடைய பாடபுத்தகத்தை எடுக்கமாட்டேன். இதுதான் பாடபுத்தகம், இங்கே இருக்கிறது. 122. அவர்கள் இந்த எல்லா சடங்காச்சாரங்களோடும் கூட வரத்துவங்கினார். கவனித்தீர்களா? இந்த கடைசி நாட்களில் ஒரு உபத்திரவம் வந்து கொண்டிருக்கிறது. 123. இப்பொழுது துவக்கமாக வெளி:13ஐ-ப் பார்ப்போம். இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த அதிகாரத்தின் ஊடாக பார்க்கும்போது நான் நோக்கிப் பார்த்தேன், இதோ சீனாய் மலையின் மீது ஒரு ஆட்டுக்குட்டி நிற்க கண்டேன். இல்லை இல்லை என்னை மன்னியுங்கள் நான் தவறான வசனத்தை எடுத்துக் கொண்டேன். நான் தவறான அதிகாரத்தை எடுத்துக் கொண்டேன்.14-ம் அதிகாரம். இப்பொழுது 13-ஐ பார்ப்போம். பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் துாஷனமான நாமங்களும் இருந்தன. 124. துஷணம் என்றால் என்ன? கேலி செய்ய, பரிகசிக்க, அதை குறித்து பேச என்பதாகும். இப்பொழுது கவனியுங்கள் ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன. கவனியுங்கள் அதற்கு அது சமுத்திரத்தில் இருந்து எழும்பி மேலே வந்தபோது, இப்பொழுது வெளி.17 குறித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் வேண்டுமானால் வெளி.17:15 தண்ணீர் அங்கே ஜனத்தொகைக்கு பிரதிநிதித்துவமாக இருக்கிறது. எனவே இந்த மிருகமானது வல்லமையை, தெய்வ பயமற்ற வல்லமையை குறிக்கிறது. பட்சிக்கிற மிருகமானது ஜனங்கள் மத்தியில் இருந்து எழும்பி கடற்கரை மணலில் நின்றது, நான் அந்த மிருகத்தைப் பார்த்தேன். அந்த மிருகம் சிறுத்தையைப் போலவும், அதன் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன. வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும், மிகுந்த அதிகாரத்தையும் அதற்கு கொடுத்தது. 125. “வலு சர்ப்பம்" இப்பொழுது கவனிக்த்தக்கதான இரண்டு காரியங்களை உடையவர்களாக இருக்கிறோம். இந்த மிருகத்தை கவனியுங்கள் அது நான்கு வித்தியாசமான குணங்களை தன்னில் கொண்டதாக இருக்கிறது. 126. இங்கே தானியேல் 7-ம் அதிகாரத்தை எடுப்பீர்களானால், குறித்துக் கொள்கிற உங்களுக்குத்தான், குறித்துக் கொள்ளுங்கள். தானியேல் அதே தரிசனத்தக் கண்டான். எண்ணூறு வருடங்களுக்கு முன்பாக அந்த தரிசனத்தை கண்டான் அவன் அந்த மிருகங்களை தனித் தனியான புறஜாதியாரின் ஆளுகையின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கண்டான். 127. இதோ அவர்கள் இருக்கிறதாக யோவான் அதை காண்கின்றான் புறஜாதியாரின் ஆளுகையின் முடிவிலே, அந்த எல்லா நான்கு மிருகங்களும், ஒரு மிருகத்தில் பிரதிநிதித்துவம் பெறுகின்றன. அதே அந்த பழைய பிசாசுகள், பொல்லாத ஆவிகள் புறஜாதியாரின் ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றையும் பிடித்துக் கொண்டு, கிரேக்கம் முதற்கொண்டு ஒவ்வொரு இராஜ்ஜியத்தின் ஊடாக தொடர்ந்தவர்களாய் அப்படியே ஆண்டுகொண்டு முடிவில் ரோமாபுரியில் ஒரு மிருகத்திற்குள் நான்கும் ஒன்று சேர்ந்தன. நாம் நேரடியாகக் கண்டுபிடித்து அவன் யாரென்று பார்ப்போம் சரிதானே? அவை யாவும் சிறுத்தை, சிங்கம், அவை யாவும் வலுசர்ப்பம், வலுசர்ப்பம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும். வலுசர்ப்பம் ரோமாபுரிக்கு பிரதிநிதித்துவமாய் இருக்கிறது. 128. நாம் அதை வாசிப்போம் அது சிந்தையில் உங்களுக்கு கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் வெளி விசேஷம் 12ம் அதிகாரத்தை வாசிப்போம். இங்கே சற்றுப் பார்ப்போம். வெளிப்படுத்துதல் 12ம் அதிகாரம் இப்பொழுது பாருங்கள்; அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்தில் காணப்பட்டது, 129. ஒரு ஸ்திரி: ஒரு ஸ்திரி எதற்கு பிரதிநிதித்துவமாய் இருக்கிறாள்? சபைக்கு பிரதிநிதித்துவமாய் இருக்கிறாள். இங்கே இது மணவாட்டியைக் குறிக்கின்றது இதுதான் சபை உண்மையான சபையைக் குறிக்கிறது. ஒரு ஸ்திரி சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், 130. பாருங்கள் சந்திரன் அவளுக்கு கீழே இருக்கின்றது. சூரியன் அவள் தலையில் இருந்தது, சந்திரன் அவளின் பாதங்களின் கீழே இருந்தது. சூரியனானது கிருபையின் யுகங்களாய் இருந்தது, சந்திரனானது நியாயப் பிரமாணத்தின் யுகங்களாய் இருந்தது. அந்த வைதீக சபையானது. சம்பிரதாய சபையாய் அந்த ஸ்திரி இருந்தாள். அவள் நியாயப் பிரமாணத்தின் மீது நின்று கொண்டிருந்தாள். நியாயப் பிரமாணமோ கடந்து போய்க் கொண்டிருந்தது. ஏனென்றால், நியாயப் பிரமாணமானது வர இருக்கின்ற நன்மையான காரியங்களின் நிழலாய் இருக்கிறது. சரிதானே? பிரதிபலிக்கின்ற சூரியனின் நிழலாகத்தான் சந்திரன் இருக்கிறது சரிதானே? சந்திரனை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. நியாயப் பிரமாணம் அவளுடைய பாதங்களின் கீழே இருக்கிறது, அந்த நாளில் அவள் நியாயப் பிரமாணத்தின் ஊடாக ஜீவித்து வந்தாள். அவள் எவ்விதமாக ஆடை அணிந்திருந்தாள் என்று கவனிக்கவும், பாதங்களின் கீழ் சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் உள்ள கிரீடமும் இருந்தன. சபையானது பன்னிரெண்டு அப்போஸ்தர்களுடைய உபதேசத்தில்தான் கிரீடம் சூடப்பட்டிருக்கிறது. பாருங்கள். அவள் கர்ப்பவதியாயிருந்து பிரசவ வேதனை அடைந்து பிள்ளையை பெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அது வைதீக சபையாய் இருக்கிறது. கவனியுங்கள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது. ஏழு தலைகளையும், பாருங்கள் அந்த ஏழு-ஐ உங்கள் சிந்தையில் வைத்திருங்கள், அந்த ஏழு தலைகள் எப்பொழுதும் நினைவில் வையுங்கள். ஏழு தலைகளையும், பத்து கொம்புகளும் தன் தலைகளின் மேல் ஏழு முடிகளையும் உடைய சிவப்பான, பெரிய வலுசர்ப்பமாய் இருந்தது. இப்பொழுது அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளை பூமியில் விழத்தள்ளிற்று. பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரி பிள்ளை பெற்ற உடனே அந்த பிள்ளையை பட்சித்து போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது, சகல ஜாதிகளையும் இரும்புக் கோலால் ஆளுகைச் செய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள். அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும், அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 131. அந்த வைதீக ஆச்சார சபையானது அங்கே நின்று கொண்டிருந்தது. கீழ் நோக்கி சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது, பன்னிரெண்டு அப்போஸ்தலர்களின் உபதேசத்தை உடையதாய் இருந்தது. சரிதானே?. அவளுடைய பாதங்களுக்கு கீழே சந்திரன் இருந்தது, அது நியாயப் பிரமாணம் வரப்போகிற காரியங்களின் நிழலாய் இருந்தது. சுவிசேஷ வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சூரியன் வெளி வந்ததும் நியாயப்பிரமாணம் மங்கிப் போய் மறைந்தது. 132. அவள் பிரசவ வேதனை அடைந்து ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள். அது இயேசுகிறிஸ்து, அவர் தேவனிடத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் எடுத்துக் கொண்ட உடனே இதோ இங்கே இருக்கிறது, அந்த வலுசர்ப்பமாகிய அந்த சாத்தான் பிள்ளைப் பெற ஆயத்தமாய் இருக்கின்ற அந்த ஸ்திரியை கண்டவுடனே அந்தப் பிள்ளையை பெற்ற உடனேயே, கொலை செய்யும்படியாய் அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. 133. இயேசுவானவர் பிறந்தபோது ரோமசாம்ராஜ்யம் ஒரு பிரகடனம் செய்து, இயேசுகிறிஸ்துவை கொல்லும்படியாக இரண்டு வயதுள்ள ஆண்பிள்ளைகள் அனைவரையும், கொன்று போடவேண்டும் என்ற கட்டளை இட்டது, தேவன் அவர்களுடைய கண்களை மூடிப்போட்டு மோசே -க்கு செய்த அதே விதமாக அவரை எகிப்திற்கு கொண்டு சென்று அவரை மறைத்து வைத்தார். 134. அங்கே இருக்கிற அந்த சிவந்த வலுசர்ப்பமாகிய சாத்தான், அவனுடைய இருக்கை எங்கே இருக்கிறது.? ருஷ்யாவில் இல்லை ரோமாபுரியில் இருக்கிறது சாத்தான் அவனுடைய இருக்கையையும், அவனுடைய அதிகாரத்தையும், அவனுக்கு கொடுத்தான். சிவந்த வலுசர்ப்பம் ருஷியா அல்ல. 135. ருஷியா தான் அந்தி கிறிஸ்து என்று மகத்தான போதகர்கள் கூறுகிறதை நான் செவியால் கேட்டிருக்கின்றேன். 136. ஏன்? ரஷியாவிற்கும் அந்தி கிறிஸ்துவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அது கம்யூனிசம் புரோட்டஸ்டன்ட் கொள்கையும், கத்தோலிக்க கொள்கையும், இவைகளின் தவறுகள் தான் கம்யூனிசத்தை உருவாக்கினது, அவர்களை ருஷியா வெளியே துரத்துவதற்கான காரணம், என்னவென்றால் அவர்கள் எல்லா பணத்தையும் தங்களிடத்திலே வைத்துக் கொண்டிருந்தார்கள். பரிசுத்தவான்களாகிய அவர்களிடத்தில் எல்லா ஜெபங்களையும் கூறும்படியாய் கூறினார்கள். எனவே மிகப் பெரிதான கட்டிடங்களையும் கட்டினார்கள். ஜனங்களுடைய சொத்துக்களையெல்லாம் இவர்கள் உடையவர்களாக இருந்து அதை இந்த விதமாக சுருட்டி கொண்டார்கள் அவர்களுடைய ஜீவியத்தில் வித்தியாசமே இல்லை. உலகத்தில் இருக்கும் மற்ற ஜனங்களின் ஜீவியத்திற்கும் இவர்களுக்கும் வித்தியாசமே இல்லை. அவர்கள் அதை வெளியே துப்பிவிட்டு, கம்யூனிஷக் கொள்கையை உருவாக்கினார்கள். 137. நீங்கள், எனக்கு இன்னும் ஒருநாள் தருவீர்களானால், தேவன் தருவாரானால் ரோமாபுரியை அழிக்கத்தக்கதான கம்யூனிசமானது சர்வவல்லவரின் கரங்களில் இருப்பதை நேராக நிருபிப்பேன். நினைவிருக்கட்டும், தேவனுடைய தீர்க்கதரிசி என்ற முறையில் நான் இதை கூறுகிறேன். அணுகுண்டு போன்ற ஏதோ ஒரு காரியத்தை ருஷியாவானது வாடிகன் மேல் போட்டு ஒரு மணி நேரத்தில் அழித்து விடுமென்று" கர்த்தர் உரைக்கிறார். கொடுர இருதயமுள்ள மனிதர்களை தேவன் எடுத்து அவர்களை அவருடைய கரத்தில் வைத்துக் கொண்டார். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற, அவர்களுக்கு நேரிட வேண்டியதை சரியாக அப்படியே நிறைவேற்ற அவர்கள் அவருடைய கரத்தில் அவருடைய கருவிகளாக இருக்கின்றார்கள். சரியா அப்படியேதான் அதுதான் வார்த்தை. 138. சகோதரனே எவ்வளவு தந்திரமான காரியங்கள் இருக்கிறது என்பதனை நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நினைவிருக்கட்டும். தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதான அந்தி கிறிஸ்து நெருக்கமாக இருப்பான் என்று இயேசு கூறியிருக்கிறார். "ஒரு மனிதனும் உங்களை வஞ்சிக்க இடம் கொடாதீர்கள்" என்று கூறியிருக்கிறார். "மரியாளே வாழ்க, நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் கிருபை நிறைந்தவள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்ற ஜெபத்தை அஞ்ஞானிகளைப் போன்று திரும்ப, திரும்ப அதையே கூறாதீர்கள், அஞ்ஞானிகளைப் போன்று இராதேயுங்கள் "வீண்வார்த்தைகளினால் அலப்பாதேயுங்கள்", "பூமியில் ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதேயுங்கள் பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்கள் பிதாவாக இருக்கிறார்'' என்று இயேசு கூறியிருக்கிறார். 139. ஆனால் நீங்களோ அப்படியே திரும்பி அதை அசட்டை செய்கிறீர்கள், எப்படியாய் இருந்தாலும் நீங்கள் அதை செய்யாதீர்கள் ஏனென்றால் அது புகழ் பெற்றதாக இருக்கிறது. ஒரு புகழ் பெற்ற காரியத்தையே பிசாசு எப்பொழுதும் உடையவனாக இருப்பான். ஆதிமுதற்கொண்டு அது எப்பொழுதும் அந்தவிதமாகத் தான் ஒரு மார்க்க வேஷத்தை உடையதாக இருந்து வருகிறது. காயின் அதே காரியத்தை உடையவனாய் இருந்தான். இதோ இங்கே அவனுடைய ஆவி அசைந்து தொடர்ந்து அந்த கிறிஸ்துவின் ஊடாக போய்க் கொண்டே இருக்கிறது. அதே விதமாய், கொல்லப்பட்டவனாகிய ஆபேலின் ஆவியும் கூட இதோ போய்க் கொண்டிருக்கிறது. அதுசரியே, கவனியுங்கள். 140. இப்பொழுது நோக்குங்கள், அங்கே நாம் கண்ட இந்த மிருகங்களெல்லாம், இங்கே இந்த ஒரு மிருகத்திற்குள் ஒருங்கே முற்றுப்பெறுகிறது. அது அந்த சிவப்பான வலுசர்ப்பமான சாத்தான்தானே. இப்பொழுது நாம் 15ம் அதிகாரம், 15ம் வசனத்தைப் பார்ப்போம். 141. இப்பொழுது சாத்தானின் இருப்பிடமாக ரோமாபுரி இருக்கிறதை நீங்கள் காணலாம். ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் உடைய மிருகமானாது கிறிஸ்துவாகிய பிள்ளை அருகே அவர் பிறந்தபோது அவரைக் கொன்றுபோட நின்று கொண்டிருந்தது. அதைச் செய்தது யார்? “ஏரோது ரோமாபுரி” எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. நமக்கு போதுமான நேரம் இருக்குமானால், கர்த்தர் நமக்கு உதவி செய்வாரானால், அதை நாம் நேரடியாக தானியேல் புத்தகதில் நமக்கும் அதுகிடைக்கும், நாம் அதை பார்க்கலாம். 142. வேதவார்தைகளெங்கும் காணப்படுவதை போன்று புறஜாதியாரின் துவக்கம் முதற்கொண்டு அந்த பாபிலோன், ஆதியாகமத்தில் துவங்கி வெளிப்படுத்தலில் முடிகிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும், விக்கிரகத்தை உள்ளே கொண்டுவர விக்கிரகத்தை ஆராதிக்க வேண்டி அங்கே காம்-மின் குமாரானாகிய நிம்ரோத்துவுடன் துவங்கி, விக்கிர ஆராதனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அப்படியே தொடர்ந்து வந்து அவ்வளவு தந்திரமாக இந்த கடைசி நாட்களில் அது கிறிஸ்துவின் பெயரை தரித்துக் கொண்டு இன்னமும் விக்கிரக ஆராதனையாக இருக்கிறது. 143. மகத்தான பரிசுத்த பவுல் II தெசலோனிக்கயரில் கூறவில்லையா?. நாம் மேற்கொண்டு போவதற்கு முன்பாக நாம் அதை வாசிக்கலாம். தெசலோனிக்கையர் இரண்டாம் அதிகாரம் பவுல் என்ன கூறுகிறார் என்று பாருங்கள். நாம் ஜீவிக்கின்ற இந்த நாளுக்குள் வருவதற்கு முன்னர் அவன் அதை ஆவியிலும் கூட கண்டான். 144. எப்படியான நாட்களில் நாம் ஜீவிக்கிறோம், எப்படியான இருளுக்குள்ளாக நாம் ஜீவிக்கிறோம், எப்படியான அஞ்ஞான இருளுக்குள்ளாக ஆண்களும், பெண்களும் கூடிவருகிறோம் என்பதைக் கூட அறியாதவர்களாய் இருக்கிறார்கள், என்ன ஒரு பரிதாபம். 145. பவுல் கூறுகிறார், "விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு அந்தப் பாவமனிதன் வெளிப்பட்டால் ஒழிய அந்தநாள் வராது'' என்று, இப்பொழுது கவனியுங்கள் அவன் ஒரு மனிதன் என்று அவன் அறிவிக்கிறான் அது சரிதானே? ''அவன் பாவமனிதன் என்றும், அவன் எதிர்த்துநிற்கிறவனாயும் தேவனென்னப்படுவதெதுவோ ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்துகிறவனாகவும் இருப்பான்" என்று பவுல் கூறுகிறார். ஒரு மனிதன் தேவனைப் போன்று ஆராதிக்கப்படுவான், ஒரு மனிதன் தன்னைத்தானே தேவன் என்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான். அவன் கூறுகிறான், ''விசுவாச துரோகம் முந்தி நேரிடாமல் அந்தநாள் வராது” என்று அது என்ன? சபையின் ஒரு வெதுவெதுப்பான தன்மை. 146. சரி கவனியுங்கள், உங்களுக்காக நான் அதை வாசிக்கட்டும் வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள் II தெசலோனிக்கையர் நாம் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாதபடி துவங்க சரியான பகுதியை என்னால் எடுக்க முடியும். "ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு," II தெச: இரண்டாம் அதிகாரம் மூன்றாம் வசனம். "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, (இப்பொழுது இது லவோதிக்கயா சபை) (மனிதன்ஒருமை) கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலோழிய, தேவகுமாரனுக்குப் பதிலாக கேட்டின் மகன், அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவன் எனப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவை எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத்தான் தேவன் என்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். (பாவ அறிக்கைகளை ஏற்றுக் கொள்ளுவான்). 147. என்னுடைய கத்தோலிக்க நண்பனே. என்னிடம் கூறாதே, "நாங்கள் ஒரு திருமணத்தைத்தான் விசுவாசிக்கிறோம் கத்தோலிக்க சபை ஒரு திருமணத்தைத்தான் பேசுகிறது'' என்று நீ எப்படி கூற முடியும்? உன்னிடத்தில் பணம் இல்லை. அதெல்லாம் சரிதான். ஆனால் நான் உங்களக்கு கூறுகிறேன், சரியாக இங்கே சொந்த ஜனங்களின் மத்தியில் இது இருக்கிறது, ஒரு வாலிபஸ்திரி இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு தாய் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், தகப்பனும் கூட இங்கே இருக்கிறார், இன்னொரு ஸ்திரியும், ஒரு பையனும் இருக்கிறார்கள். அந்தப்பெண் ஒரு புரோட்டஸ்டன்ட் பையனை மணந்து கொண்டாள். அவர்கள் பிரிந்து வெளியே போய் விட்டார்கள். பின்னர் என்னே? முதலாவது நடந்த காரியம் உங்களுக்கு தெரியுமா? அந்தப் பெண் இன்னொரு கத்தோலிக்கப் பையனை மணந்து கொள்ளப்போகிறாள். அவள் போய் அங்கே போய் அதிக அளவு பணம் செலுத்திவிட்டு திரும்பி வந்து, அவள் முதன் முறை செய்த அந்த புரோட்டஸ்டன்ட்பையனை மணக்கவில்லை என்றாகிவிட்டது. இங்கே ஹோவர்ட் இருக்கிறான், என்னுடைய சொந்தஜனம். 148. சரி நான் பெயர் சொல்லி அழைக்க விரும்பவில்லை. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு 26 வயது ஆகிறது. அவள் அவனுடைய புருஷனை விட்டுவிட்டு மில்டவுனில் இருந்து ஓடிப்போய் ஒரு கத்தோலிக்கப் பையனை மணந்து கொண்டாள். இப்பொழுது அவர்கள் "அவள் சபையை விட்டு வெளியேற வேண்டும்'' என்று கூறுகிறார்கள். எனவே, அவள் மீண்டுமாக கன்னிகையாக மாற்றப்போட்டு அவளைக் கொண்டு வந்து அதேப் பையனுக்கு மணம் செய்து வைத்தனர். இது என்ன புத்தியீனமான காரியம், அவளை மீண்டுமாக ஒரு கன்னியாக மாற்றுவதா? தேவனுடைய பார்வையிலே அவள் திருமணமாகி விபச்சாரத்திற்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள். அதுமுற்றிலும் சரியே, அது கர்த்தர் உரைக்கிறதாவதும் கூட அது உண்மை. 149. என்ன ஒரு அவமானம்? அவ்வளவு பணத்தை அங்கு செலுத்துவது, அந்த காரணத்தினால் தான் இந்த எல்லா பள்ளிகளும், சபைகளும் கட்டப்பட்டன. அந்தவிதமாகத்தான் முழுஉலகமும் இருக்கிறது, இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கிற நீங்கள் அதை அறியாதிருக்கிறிர்கள். நீங்கள் ஒருமுறை என்னோடு கடல் கடந்து வரவேண்டும், அப்பொழுது அதைக் கண்டு கொள்வீர்கள். ஆம் ஐயா, அவர்களுடைய செல்வாக்கு ஓங்கி இருக்கும் இடங்களுக்கு நீங்கள் போய் பாருங்கள். 150. என்னால் நிரூபிக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டுவரமுடியும். சகோ.காப் அதை படம் எடுத்து இப்பொழுதுதான் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு புரோட்டஸ்டன்ட் போதகரைப் பற்றினது. பரிசுத்த ஆவியினால் நிரப்பட்ட ஒரு போதகர் வீங்கிப்போய் அவரும் அவருடைய மனைவியும் வீதியில் படுத்துக் கிடக்கிறார்கள். ஒரு சிறிய பெண்ணும், வீங்கிப்போய் இருக்கிறாள். காரணம் என்னவென்றால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை பிரசங்கித்து, ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதற்காக, அவர்கள் அப்படிபட்டவர்களை வீதிகளில் கொலை செய்து அவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை அவர்கள் மீது துப்பி, பல நாட்களாக அப்படியே வீதியிலேயே விட்டு விடுகிறார்கள், அது உண்மை . 151. சரியாக அந்த இடத்தில் தான் சகோஆஸ்பார்ன் அவர்களை வெளியில் கொண்டு செல்ல அவர்கள் துப்பாக்கியை கழுத்தில் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே சென்றார்கள் ஒரு கூட்டம் பாதிரிமார்கள் அங்கே வந்து இந்த வாலிபனை கொன்று போட்டார்கள். அந்த மனைவி அப்பொழுதுதான் ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தாள். அவர்கள் அந்த விதமாக வீதியின் ஊடாக பாதுகாப்பாக நடந்து வந்து அவனை அடக்கம் செய்தனர். இந்த தாயானவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த மரித்த கணவனின் பின்னாக அழுதுகொண்டே சென்றாள். ஜனங்கள் அவரவர்களுடைய ஜன்னல்கள் வழியாக, உத்தம இருதமுள்ளவர்களாய் அதைப் பார்த்துக் கொண்டிருந்து "கத்தோலிக்க சபையானது இந்தவிதமாய் இருக்கப் போவதென்றால் நாங்கள் அதை உதறி தள்ளுகிறோம்'' என்றார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் அதைப் பின்பற்றி வந்தார்கள். சகோ ஆஸ்பார்னுக்கு அங்கே ஒரு எழுப்புதல் உண்டாகி தேசத்தைவிட்டு அவரை வெளியே அனுப்பமுடியாத நிலைமை மட்டுமாய் சென்றது. அவ்வளவு அதிகமான ஜனங்கள் அதை பின்பற்றினர். அது சரியே! சரியே! 152. ஒ... இந்த மாய்மாலம். அது ஒரு மோசமான காட்சி என்று அறிவேன், அப்படியே அமைதியாக உடகார்ந்திருங்கள் கத்தோலிக்க நண்பர்களே. இன்னும் சில நிமிடங்களில் நாம் இன்னொரு பக்கத்தைப் பார்ப்போம். சரிதானே... கவனியுங்கள். 153. நாம் இன்னும் சற்று தொடர்ந்து போய் பார்ப்போம். நான் இதை உங்களுக்கு கூறட்டும் ஒருவேளை எனக்கு அவகாசம் இருக்கலாம். இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள். வாசகர்கள் ஒவ்வொருவரும் உங்கள் சிந்தையில் திரும்பி போய் மனதில் அக்காட்சியைப் பாருங்கள். 154. இங்கு இருக்கின்ற ஒவ்வொரு ஆச்சார, வைதீக விசுவாசிகளுக்கும் புறஜாதியாரின் ஆளுகை நெபுகாத்நேச்சார் - ருடன் துவங்கியது என்று தெரிந்ததே. அது சரிதானே? வைதீக ஆச்சார விசுவாசி ஒவ்வொருவனும் அதை அறிவான், நேபுகாத் நேச்சார் ஒரு தரிசனம் கண்டான், தானியேல் அதற்கு வியாக்கியானத்தை கொடுத்தான். அது சரிதானே? அது ஒரு பொன்னினால் ஆன தலையாய் இருந்தது. அதுதான் பாபிலோன் ஆட்சி இரண்டாவது, மேதிய, பெர்சிய ஆட்சியாகும், அடுத்தது கிரேக்க சாம்ராஜ்யம் அதற்கு பின்னர் வந்தது ரோம சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யத்தின் கடைசி கட்டத்தில் கைகளினால் பெயர்க்கப்படாத, மலையில் இருந்து வெட்டப்பட்டு, உருண்டோடிவந்து அந்தக்கல் சிலையை உடைத்துத் தள்ளி தூள் தூளாக்கி பூமியை நிரப்பின கல்லாகிய இயேசு கிறிஸ்துவாக அது இருக்கிறது. எந்த ஒரு விசுவாசிக்கும் அது தெரிந்ததே. 155. கடைசி நாட்களில் இவர்கள் இப்படி பல வித்தியாசமான இராஜ்யங்களாய், விரல்கள் முதலாவைகளாய் உடைந்தபோது அஙகே களிமண்ணும் இரும்புமாயிருந்தது அதன் அர்த்தம் என்னவன்றால், எப்படி களிமண்ணும், இரும்பும் ஒன்றோடு ஒன்று சேர முடியாதோ, அதேவிதமாக இவர்களும் ஒருவரோடு ஒருவர் இணையமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய வித்துக்களை கலக்க முயற்சிப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் அவர்களுக்குள் மணம் செய்து கொள்வார்கள். அவர்களுடைய பிள்ளைகளை எழுப்ப முயற்சிக்கிறார்கள். வல்லமைக்காக வேண்டி அவைகளை முறித்துப் போடுவார்கள். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அது ஒரு பிடிப்பை வைத்துக்கொண்டிருக்கிறது. ஜனங்களாகிய நீங்களோ அதற்கு குனிந்து, "அற்புதமாய் இருக்கிறது,” என்று கூறுகிறீர்கள். 156. இந்த ஸ்டீபன்சன் என்பவரை நோக்கிப் பாருங்கள் அவர் பெயர் என்னவாகவும் இருக்கட்டும், இங்கே பாருங்கள் அவருடைய பெயர் என்ன? நான் மறந்து விட்டேன். இன்று எல்லா விவாதங்களையும் இங்கு எழுப்புகிறவர். ஆம்... ஒ.... என்னே !. 157. இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் அடிமட்டம் வரைக்கும் அழுகிக்போய் இருக்கிறது. ஆம், ஐயா, எந்தநேரம் முதற்கொண்டு துவங்கினது என்று என்னால் நிரூபிக்க முடியும். வெளி.12ல் இருக்கின்ற இந்த ஸ்திரி அவளுடைய ஆண்பிள்ளையானது தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்படியாய் அது எடுத்துக் கொள்ளப்பட்டபோது அந்த ஸ்திரியானவள் ஆயிரத்து இருநூற்றி அறுபது நாட்களுக்கு போஷிக்கப்படும்படியாய் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள். சரியாக பிளிமத்பாறையின் தேதிக்கு சரியாய் இருக்கிறது. சரியாக அந்த தேதியில் தான் சபையானது மார்க்க சுயாதீனத்திற்காக இங்கே வந்தது, அவள் இங்கே ஸ்தாபித்துக் கொண்டாள். 158. வெளி 13ம் அதிகாரத்தில் இன்னும் கீழ் தொடர்ந்து வாசிப்போம் இங்கே 12ம் வசனத்தைப் பாருங்கள். ஒரு நிமிடம் அதற்கு முன்பாக சற்று மேலாக படிக்க விரும்புகிறேன். அங்கே நாம் பார்க்கிறோம், அவர் அங்கே கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டிருக்கிறதாக கண்டார். இப்போது நாம் 11ம் வசனம் முதல் பார்ப்போம். வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்ப கண்டேன், (தண்ணீரில் இருந்து வெளிவரவில்லை). 159. "பூமியில் இருந்து எழும்பக் கண்டேன்" பின்னர் அடர்த்தியும், திரள் கூட்டமுமான ஜனங்கள், அது தண்ணீராக இருக்கின்றது. ஆனால் இங்கே பார்க்கும் போது அங்கே ஜனங்களே கிடையாது. அதுதான் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA). ஆனால் அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளை உடையதாக இருந்தது. 160. ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகள், ஒரு ஆட்டுக்குட்டி அல்ல அது என்ன? அது நம்முடைய அமெரிக்க எருமை. நிச்சயமாய் பாருங்கள், அதோ அது இருக்கிறது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகள் ஆனால் அதற்கு பின்னார் அது என்ன செய்தது? அதற்குபின்னர் அது என்ன செய்தது? மார்க்க சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. முதலில் அவன் ஒரு ஆட்டுக்குட்டியைப் போன்று நடந்து கொண்டான், ஒரு ஆட்டுக்குட்டியைப் போன்று பேசினான். ஆனால் நினைவிருக்கட்டும், அவன் ஒருபோதும் ஒரு ஆட்டுக்கடாவாக ஆகவில்லை, அவன் ஒரு ஆட்டுக்குட்டியாகவே இருந்தான். இந்த தேசத்திற்கு வயது 150 வருடங்கள் தான் என்று உங்களுக்குத் தெரியும், வெறுமனே இன்னும் ஒரு ஆட்டுக்குட்டியே, பின்னர் ஒரு வலுசர்ப்பத்தைப் போன்று பேசினது, அது முந்தின மிருகத்தின் (சிவந்த வலுசர்ப்பம் ) அதிகாரம் முழுவதையும் அதன் முன்பாக நடப்பித்தது, சாவுக்கேதுவான காயம் சொஸ்தம் அடைந்த முந்தின மிருகத்தை பூமியும் அதன் குடிகளும் வணங்கும்படி அது செய்தது பார்த்தீர்களா அன்றியும் அது மனுஷருக்கு முன்பாக வானத்தில் இருந்து பூமியின் மீது அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாக பெரிய அற்புதங்களை நடப்பித்தது. (அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு சாமர்த்தியமான புத்தி சாதுர்யமுள்ள காரியம் முதலாய் கொண்ட தேசம் இக்காரியங்களினாலே தேசத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது). 161. சபையும், அரசாங்கமும் ஒன்றாக இணைகின்ற ஒரு நேரத்திற்குள்ளாக இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) வரும், கம்யூனிஸத்தை எதிர்க்கும் படியாக புரோட்டஸ்டண்ட்களும், கத்தோலிக்கர்களும் அவர்களுடைய காரியங்களை சேர்த்து தூக்கி எறிவார்கள். அதுசரியாக அப்படியே தேவன் கூறியதை நிறைவேற்ற தேவனுடைய கரத்தில் இருந்து கிரியை செய்கிறதாக இருக்கும். 162. புரோட்டஸ்டன்ட்களாகிய நீங்களோ அங்கு எங்கேயோ படுத்து தூங்கிக் கொண்டு வேதத்தை வாசிப்பதற்கு பதிலாக காதல் கதை இதழ்களைப் படித்துக் கொண்டிருக்கிறிர்கள். எங்கேயாவது ஒரு ஜெபக்கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக ஏதோ ஒரு விதமான விருந்திற்கு வீணாக, வெளியே அலைந்து திரிகிறீர்கள். ஒன்றுமில்லாத சிறிய காரியங்களில் வேண்டாத தடபுடல் செய்வார்கள். நித்தியம் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பிர்களானால் நீங்கள் எங்கேயாவது முழுங்காலில் இருப்பீர்கள். 163. கவனியுங்கள் புறஜாதியாரின் ஆளுகை துவங்கின அந்த காலத்தில் நெபுகாத்நேச்சரால் துவங்கின போது அந்த ஆளுகை எப்படிவந்தது என்று நாம் கவனிப்போம். அது உள்ளே வந்தவிதமாகவே அது வெளியே சென்றது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். புறஜாதியாரின் கிருபைக்கு ஒரு துவக்கத்தின் நேரம் இருந்து என்பதையும் முடிவின் நேரம் இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். அது சரிதானே? 164. இப்பொழுது கவனியுங்கள் நெபுகாத் நேச்சார் இருந்தபோது ஒரு புத்தி கூர்மையுள்ள தீர்க்கதரிசியாக, தானியேல் அங்கே அனுப்பப்பட்டான். எல்லா யூதர்களும் அங்கே பாபிலோனியர்களுக்கு தலைவணங்கி ஒருவிதமாக தங்களைத் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது அங்கே மூன்று நான்கு புருஷர்கள் இருந்தார்கள். அவர்கள் மூன்றுபேர்கள் (சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ) தானியேலும் தேவனை மட்டுமே சேவிப்பதாக இருதயத்தில் தீர்மானம் கொண்டனர். நெபுகாத் நேச்சாருக்கும், பெல்ஷாத்சாருக்கும் தானியேல் ஒரு மகத்தான மனிதன் ஆனான். அப்படி அவன் ஒரு மகத்தான் மனிதனாக ஆனபோது, இப்பொழுது கவனியுங்கள் நெபுகாத் நேச்சார் ஒரு பொற்சிலையை உண்டு பண்ணி, அதைக்கொண்டுபோய் ஒரு சமபூமியில் நிறுத்தி அந்த சிலையை யாவரும் வணங்க வேண்டும் என்று கூறினான். யாருடைய உருவம் அங்கு சரியாக வைக்கப்பட்டது. 165. அதன் கபடற்ற தன்மையை நீங்கள் எப்பொழுதாவது கவனித்துண்டா? அது ஒரு மனிதனுடைய உருவம், அது தானியேலாய் இருந்தது. தேவர்களுடைய ஆவிகள் இவர்களுக்குள் இருக்கிறது என்று அவன் சொல்லவில்லையா? அஞ்ஞானிகள். அவர்களைப் போன்று இருப்பது, அப்பேர்ப்பட்ட மூன்று அல்லது நான்குபேர் இருந்தாரகள் "தேவர்களுடைய ஆவிகள் அவனுக்குள் இருக்கிறது'' அவர்கள் தானியேலின் உருவச்சிலையை உண்டு பண்ணி அந்தச் சிலையை பணிந்து கொள்ளாத எவன் ஒருவனும் எரிகின்ற அக்கினிச் சூளையில் தூக்கி எறியப்படுவான் என்று கூறினான். நீங்கள் கவனிப்பீர்களானால் தானியேல் அந்த காட்சியில் அங்கே இல்லை. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? அந்த சிலையைத் தாழவிழுந்த பணிந்து கொள்ளாதிருக்கும் எவன் ஒருவனும் துண்டுகளாக வெட்டப்பட வேண்டும், அல்லது சிங்கங்களின் கெடியிலே எறியப்பட வேண்டும், அல்லது அக்கினிச் சூளையிலே போடப்படுவான், அல்லது ஏதோ ஒருவிதமான தண்டனை அவனுக்குக் கொடுக்கப்படும். அந்த விதமாகவே. 166. புறஜாதியாரின் காலம் ஒரு அஞ்ஞான மத ஆதாதனையுடனும், அதற்கு தலைவணங்கும்படியான ஒரு உபத்திரவத்தோடும் துவங்கினது. அந்தவிதமாகவே முடியும். ஒரு பரிசுத்த மனிதனாகிய இயேசு கிறிஸ்து அவருக்கு ஒருசிலை, அதை வணங்க வேண்டும். முதலானவைகளோடு முடியும் என்று வேதாகமம் முன்னுரைக்கின்றது. 167. உங்களுக்கு நினைவிருக்கும், ஃபாக்ஸ் அவர்களின் "இரத்தசாட்சிகள் " என்ற புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு முன்பாக ஒருசிலுவை மரண சிலையை வைத்து அவர்களுடைய ஒவ்வொரு புயங்களிலும் இவ்விதமாக ஒவ்வொரு எருதுகளை கட்டி, நீங்கள் புரோட்டஸ்டன்ட் மார்க்கத்தை நிராகரித்து ஒரு கத்தோலிக்கனாகி இந்த சிலுவை உருவத்தை முத்தம் இடுங்கள் என்பார்கள், செய்ய மறுத்தால் இரண்டு எருதுகளையும் இரண்டு எதிர் திசைகளில் ஒட்டி அவர்களை இரண்டாக கிழிப்பார்கள். அவர்களை கம்பத்தில் கட்டி கொளுத்தினார்கள், அவர்கள் எல்லா காரியங்களையும் செய்தார்கள். நான் அந்தப் பழங்கால நிலத்தடி சமாதிகளுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். பாருங்கள் அது உண்மை, அவர்கள் அங்கே கிடக்கிறார்கள். மார்ட்டின் லுத்தர் காலத்திற்கு முன்பாக இரத்த சாட்சிகளாக அவர்கள் எப்படியெல்லாம் போக வேண்டி இருந்தது வேதப்பிரகாரமாய் நாம் அதைப் பார்க்கிறோம். 168. இப்பொழுது மீண்டுமாக கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் ஒரு மகத்தான காரியத்தை கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த பாபிலோனிய இராஜ்யம் எந்தவிதமாக உடைந்தது, ஒரு இரவு அவர்கள் பரிசுத்த பாத்திரங்களை கொண்டு வந்து அதில் திராட்சை ரசம் குடிக்கத் துவங்கினர். ஒரு களிப்பான நேரத்தை அடைவதற்கு அவர்கள் போய் ஸ்திரிகளையும், மறுமனையாட்டிகளையும், கொண்டு வந்து நடனமும், களியாட்டமும் செய்து கொண்டாடத் துவங்கினர் அது சரிதானே? சரியாக அந்த நேரத்தில் தானே சுவற்றில் ஒரு கை உறுப்பு "மென மென தெக்கால் உப்பார் சின்" என்று எழுதிற்று அது சரியா? அவர்கள் போய் அவர்களுடைய கல்தேயர்களை, புத்தி சாதுரியவான்கள், வெதுவெதுப்பான சபை அங்கத்தினர் களையும் கொண்டு வந்தார்கள், அவர்கள் ஒருவராலும் அதைப் படிக்கமுடியவில்லை , அது சரியே. 169. ஆனால் அறியாத மொழிகளை படிக்கக்கூடிய ஒரு மனிதன் அங்கே இருந்தான் அல்லேலுயா அதை வியாக்கியானம் செய்யக்கூடியவனாகவும் இருந்தான். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களால் புரிகின்றதா? அவனால் அறியாத மொழிகளை வியாக்கியானம் செய்ய முடியும், அந்த விதமாகத்தான் அந்த பாபிலோனிய இராஜ்யம் வெளியேறியது. 170. அந்தவிதமாகவே அவள் இப்பொழுது வெளியேறுகிறாள் பரிசுத்த ஆவியன் அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், வல்லமையையும், அடையாளங்களையும் உடையவர்களோடும் வெளியேறுகிறது. அதோ இருக்கிறார்கள் மீதியாய் இருப்பவர்கள். 171. அங்கே அந்தவிதமாகத்தான் அது உள்ளே பிரவேசித்தது, அங்கே அதேவிதமாகத்தான் அது வெளியேறுகிறது, சரியாக அப்படியே ஒரு அரை அஞ்ஞானமதத்தின் ஒரு வணங்குதலும், பலவந்தத்திலும் வெளியேறினது. ஒரு கடினமான கட்டத்தில் தேவன் உட்பிரவேசித்து அறியாத பாஷையில் எழுதி, ஒரு மனிதன் அதை வியாக்கியானித்தான். அவனால் வியாக்கியானித்திருக்கக்கூடும், அவனுக்கு அந்த பாஷை தெரியாது, வேறு ஒருவருக்கும் அந்த பாஷை தெரியாது. அவனை அங்கே வியாக்கியானிக்கச் செய்த அதே பரிசுத்த ஆவியான வரும், இன்றைக்க சபையில் இருக்கின்ற பரிசுத்த ஆவியானவரும் அவரே தான். 172. நீங்கள் அதை மூடபக்தி வைராக்கியம் என்கிறீர்களே, அதை அதிகமாக அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சகோதரனே அங்கே ஒரு உண்மையான ஒன்றும்கூட இருக்கிறது, அதுசரியே, ஒரு உண்மையானதும் கூட அங்கே இருக்கிறது. நேராக பாதையிலே உங்களை குழப்புவதற்காக சாத்தான் தன்னால் இயன்ற போலிகளையும் எறியப் பிராயாசிக்கிறான், உட்கார்ந்து உங்களுடைய வேதத்தை வாசித்து, ஜெபித்து, தேவனிடத்தில் கேட்பதைக் காட்டிலும் நீங்கள் தேவனை குறித்து நினைக்காமலேயே இருப்பீர்களானால் அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவைக் குறித்து அக்கரை இல்லை என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறது அது. 173. நீங்கள் சரியாக அங்கே சென்று தேவனே, நீர் எத்தனை (Crow baits) காகங்களின் பழைய உணவுகளை வைத்திருக்கிறீர்' என்பதை குறித்து எனக்கு அக்கரை இல்லை, உமது வேதாகமம் காட்டுகிறதையே நான் காண்கிறேன், நான் தீர்மானத்துடன் இருக்கிறேன் என்று கூறுங்கள் அது சரியே. ஆபிரகாமின் வித்தாகிய எனக்கு, நீர் அதை எனக்கு வாக்களித்திருக்கிறிர்" என்று கூறுங்கள். 174. தேவன் உன்னை அழைத்திருக்கிறார், நீங்கள் அதன் அண்டை வருவீர்கள், அப்படியாக இல்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் பக்தி உள்ளவர்களாய் இருந்தாலும் சரி, எனக்கு அக்கரை இல்லை, நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள் அவ்வளவுதான், உங்களால் வரமுடியாது. அவராக அழைக்காமல் ஒருவரும் வரமுடியாது, "ஒருவரும் கெட்டுக் போகக்கூடாது" என்று அவர் சித்தமாயிருக்கிறார், ஆனால், உங்களில் அநேகர் வருவீர்கள், ஏனென்றால் நீங்கள் அதைக் குறித்து அதிக அக்கரை கொண்டிருக்கிறீர்கள். 175. அதன்பின்னர் அப்படியே திரும்பிப் போய், பரிசுத்த ஆவியானவரை தேவதுாஷணமாக கூறுவீர்கள், அது சரியே என்று நீங்கள் அறிவீர்கள், அது ஒரு போதும் மன்னிக்கப்பட முடியாது. 176. இன்னும் சில நிமிடங்களில் சாத்தானின் அடையாளக் குறி என்னவென்றும், சாத்தானின் முத்திரை என்னவென்றும், மிருகத்தின் முத்திரை என்னவென்றும் கண்டறியப் போகிறீர்கள். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக எவனொருவன் எதை பேசினாலும், இந்த உலகத்திலும், வரப்போகும் உலகத்திலும் அது அவனுக்கு மன்னிக்கப்பட மாட்டாது. முதல் சபையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை கவனியுங்கள், இதைக் குறித்து இரண்டாவது சபையில் நீங்கள் கவனியுங்கள், தேவனுடைய இராஜ்யத்திற்கு புறம்பாகவும், சாத்தானுடைய இராஜ்யத்திற்கு உள்ளாகவும் உங்களால் உங்களைத்தானே முத்தரித்துக் கொள்ள முடியும். மன்னிப்பே இல்லாத எங்கோ ஓரிடத்தில் இந்த உலகத்திலும் வரப்போகும் உலகத்திலும் உங்களால் முத்தரித்துக் கொள்ள முடியும் உண்மையாகவே, ஆனால் நீங்கள் ஜாக்கிதையாக இருங்கள் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் ஜாக்கிதையாக இருங்கள். ஏனென்றால், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதனை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 177. இவைகளெல்லாம் இப்பொழுது குவிந்து கொண்டிருக்கிறதை நாம் காண்கிறோம். எனக்கு இருபது நிமிடங்கள் இருக்கின்றன. சில நிமிடங்களில் முடிப்பதற்கு நீங்கள் என்னோடு வெளி.17ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். இப்பொழுது நாம் வீட்டிற்குப் போகும் பாதையை அணுகப் போகிறோம் கூர்ந்து கவனியுங்கள் என்னோடு சேர்ந்து வாசியுங்கள். உங்கள் வேதாகமத்தை திருப்பி வாசிக்கத் தயாராகுங்கள். இது அதை முத்தரிக்க வேண்டும். 178. நினைவிருக்கட்டும், அங்கே இரண்டு முத்திரைகள் இருக்கிறது. ஒன்று விசுவாச துரோகமாக இருக்கிறது. இன்னொன்று பரிசுத்த ஆவியாக இருக்கின்றது. ஒன்று சாத்தானின் முத்திரையாக இருக்கின்றது. 179. நினைவிருக்கப்பட்டும், நான் இதைக் கூறியிருக்கிறேன். அதாவது அந்த ஆதி கத்தோலிக்க சபையானது இப்பொழுது கத்தோலிக்க ஜனங்களே, சில நிமிடங்களுக்கு அமைதியாய் அமர்ந்திருங்கள். ஆதி கத்தோலிக்க சபையானது இந்தக் காரியத்தை குறித்து, அவர்களுடைய சொந்தக் கருத்தை கொண்டிருந்தது. அவர்கள் பரிசுத்த நற்கருணையைக் குறித்து ஒரு தவறான உபதேசத்தை உடையவர்களாய் இருந்தார்கள். அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குப் பதிலாக, ஒரு சிறிய மெல்லிய பிஸ்கட்-ஐ எடுத்துக் கொண்டார்கள். புரோட்டஸ்டன்ட்கள் கரங்களை குலுக்குதல் அல்லது ஒரு உறுதிமொழியை கூறுதலை வைத்துக் கொண்டார்கள். வேத வார்த்தையின் படியாய் அவர்கள் இருவருமே தவறுதான். இதுதான் வரைபடம், அவர்கள் வந்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஆனால் அந்தவிதமான ஞானஸ்நானம் யாருக்குமே கொடுத்ததாக அங்கே எங்கேயும் இல்லை அது முற்றிலுமாக கத்தோலிக்க ஞானஸ்நானம், முற்றிலுமாக ஒரு அஞ்ஞானமாக இருக்கிறது. அவர்கள் அதை ஒப்புக் கொண்டு, ''புரோட்டஸ்டன்ட்களாகிய நீங்கள் "எங்களுடைய ஞானஸ்நானத்திற்கு தலை வணங்குகிறீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்' என்று நான் கூறினேன். 181. அதற்கு அவர்கள் விரும்புகின்ற "எந்த வேத வார்த்தையையும் மாற்றுவதற்கு கத்தோலிக்க சபைக்கு அதிகாரம் இருக்கிறது" என்கின்றனர். "அது ஒரு பொய்'' என்று நான் சொன்னேன். அப்படியானால் நீங்கள் ஏன் அதற்கு தலை வணங்குகிறீர்கள்? என்கிறார்கள். 182. ஆம், அப்படியனால் வாயை மூடுங்கள். நான் அல்ல, எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. இது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது சரியே, ஜனங்கள் பின்பற்ற விரும்பினால் அவர்கள் தனித்து போகவேண்டியதாய் இருக்கும். நானோ உண்மையைக் கூறியாக வேண்டும். அது சரியே. 183. கவனியுங்கள் பின்னர் அவர்கள், இந்த மற்றோர்கள், சபை, அவர்களுடைய பழைய மத போதனை முறை மற்றும் அந்த காரியங்கள் யாவற்றோடும் கூட அவர்கள் வெளியே வந்தார்கள். என்ன ஒரு கூட்ட அற்பமும், அர்த்தமற்றவைகளும், அதுதானே இலட்சக் கணக்கான நாத்திகர்களையும், குளிர்ந்து போன சம்பிரதாயக்காரர்களையும் உண்டாக்குகிறது. 184. துவக்கத்திலே அது சாத்தானுடையதாக இருந்தது. பூமியின் குடிகள் எல்லோரும் "இருந்ததும், இராமற் போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுவார்கள்" என்று வேதாகமம் கூறுவதை என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும் இருந்ததும், இராததுமாகிய அது எப்படி இருக்க முடியும். பூமியின் குடிகள் எல்லோரும் அதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. 185. அஞ்ஞான ரோமாபுரி போப்பானவரின் ரோமாபுரியாய் மாறின பின்னர் அது ஒழிந்து போகவில்லை. ரோமானியத்தின் முறைமைகள் ஒழிந்துபோயிற்று ஒரு புதிய அரசன் உள்ளே வரும்போது அவன் ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்துவான். ஆனால் கத்தோலிக்க சபையின் மூலமாக போப்-பின் கொள்கை மூலமாக அஞ்ஞான ரோமாபுரிக்குள் வந்தபோது அது ஒழிந்து போகவில்லை. ஒரு போப் மரித்தால் அவர்கள் இன்னொருவரை அமைத்துக் கொள்வார்கள். ஒரு போப் மரிக்கிறார், அவர்கள் இன்னொருவரை உட்கார வைக்கிறார்கள். "இருந்ததும், இராமற் போனதும், இனி இருப்பதுமாய் இருக்கிற மிருகம் நாசம் அடையப்போகிறது" என்று வேதத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது என்று இருக்கிறது. 186. இப்பொழுது கவனியுங்கள், ஒருவன் வந்து, நீங்கள் எல்லோரும் வெளி 17-ஐ இப்பொழுது கவனியுங்கள், ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து ஊற்றப்பட்ட ஏழு கலசங்களில் இது கடைசி கலசமாய் இருக்கிறது. என்னோட பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்காந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் இராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; 187. வெளி சுவிசேஷம் 12 ஐ கவனியுங்கள். அது ஒரு கன்னிகையாகிய ஸ்திரியாய் இருக்கிறது. அவள் ஒரு நல்ல நாகரீக பெண்மணியாக இருக்கிறாள். அவள் எவ்வளவு அழகாக நின்று கொண்டிருக்கிறாள். 188. ஆனால் இங்கேயோ மகாவேசி என்று அழைக்கப்படுகிற ஒருவள் இருந்தாள், வேசி என்பதற்கு விபச்சாரி என்று அர்த்தம், அது என்ன? அதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். 189. வேகமாக செல்வதற்காக என்னை மன்னியுங்கள் எனக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. அப்படியானால் இன்னும் ஒரு மணிநேரம் பிரசங்கிக்கப் போகிறேன். எனவே அமைதியாய் இருங்கள் (சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள்). 190. கவனியுங்கள், சரி நாம் ஆராய்ந்து பார்ப்போம். அவள் ஒரு அசுசியான ஸ்திரி, ஒரு மகாவேசி என்றால் என்ன? அந்த வார்த்தையை கூறுவதையே நான் வெறுக்கிறேன். ஆனால் அது இங்கே வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல ஸ்திரியைப் போன்று பாசாங்கு செய்து கொண்டு, மற்ற ஆண்களோடு விபச்சாரம் செய்து கொண்டிருப்பது. இப்பொழுது ஒரு ஸ்திரி சபைக்கு பிரதிநிதித்துவமாய் இருக்கிறாள், பிறகு சபையானது ஒரு கிறிஸ்தவனைப் போன்று பாவனை செய்து கொண்டு மற்ற காரியங்களோடு விபச்சாரம் செய்கிறது. அது சரிதானே. 191. அவள் திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிறாள். அது அடர்த்தியும், திரள் கூட்டமுமான ஜனங்கள் ஆவார்கள். 15ம் வசனத்தில் நீங்கள் அதைக் காணலாம். இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதை குறித்துப் பார்ப்போம். திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற அந்த ஸ்திரி, "மகாவேசி” என்ன ஒரு காரியம்? நமக்கு மட்டும் சில நாட்கள் இருக்குமானால், காயினில் துவங்கி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவன் வருகை மட்டுமாய் அந்த ஸ்திரியை எடுத்து ஆராய்ந்து பார்த்து முதலாவதாக ஒரு சபையாக ஸ்தாபித்துக் கொண்டவள் அவள்தான் என்று என்னால் நிருபிக்க முடியும். அவள் ஸ்தாபனங்களுக்குத் தாயாக இருக்கிறாள் கவனியுங்கள் திரளான தண்ணீரின் மீது உட்கார்ந்திருக்கிற அந்த ஸ்திரியின்மேல், திரளான தண்ணீர்கள் மேல் இப்பொழுது முதலாம் வசனம், மகா வேசியோடு பூமியின் இராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே. 192. வேறு வார்த்தைகளில் கூறினால் அவள் ஒரு கிறித்தவ சபைபாய், உயர்வானவளாய், அழகானவளாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறாள். அவள் எப்படி உடுத்தியிருக்கிறாள் என்பதை இன்னும் சில நிமிடங்களில் கவனியுங்கள். பொன்னினாலும், இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருக்கிறாள். "அவளைப் போன்று யார் இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள். 193. அவளுடைய கரத்தில் ஒரு பாத்திரம் இருந்தது அது "அவளுடைய வேசித்தனத்தின் மதுவால்” நிறைந்திருந்தது. அவளுடைய அருவருப்புகளாலும், இராஜாக்களுடன் வேசித்தனம் பண்ணின உபதேசங்களாலும், "உங்களை உத்தரிப்பு ஸ்தலத்தில் இருந்து வெளியே கொண்டு போவதற்கு", ஒரு சில ஜெபம் இன்னும் எல்லாக் காரியங்களும். அங்கே தான் இருக்கிறது. நாம் வாசிக்கிறது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது கவனியுங்கள். எனவே "என்னை வனாந்திரத்திற்கு கொண்டு போனான்." ஒருக்கால், இப்பொழுது நாம் கவனிப்போம், அவள் மதுபானத்தை உண்டு பண்ணினாள், அது மூன்றாவது வசனம் சரி. ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்கு கொண்டு போனான் சிவப்பு நிறமுள்ள ஒரு மிருகத்தின்மேல், ஒரு ஸ்திரி ஏறியிருக்க கண்டேன். (சிவப்பு நிறம் ஐசுவரியத்தை குறிக்கிறது. உலகிலேயே மிகுந்த ஐசுவரியமுள்ள சபை). 194. "அவளோடு யாரால் யுத்தம் செய்ய முடியும்" என்று அங்கே அவர்கள் கூறுகிறார்கள். உலகத்தில் அங்கே ஒரு மனிதன் இருக்கிறான் நெபுகாத்நேச்சாரின் தரிசனத்தின்படியாக வல்லமை கொண்ட ஒரே ஒரு மனிதன்தான் இருக்கிறான். அந்த ரோம் இரும்பு எல்லாவிரல்களிலும் பாய்ந்திருந்தது. உலகத்தின் ஒவ்வொரு தேசத்திற்குள்ளும் பாயந்திருந்தது. ரோமாபுரியின் போப்-பானவரின் வார்த்தைக்கு உள்ள கனத்தைப் போன்று வேறு எந்த ஒரு மனிதனுக்கும் இந்த உலகில் கிடையாது. ஜனாதிபதி ஐசன் ஹோவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பேசலாம். அது ஒரு நியமமாக இருக்கலாம். ஆனால் அவர் பேசக்கூடிய மற்ற நாடுகளும் இருக்கலாம். அவர்களுக்கோ அது ஒன்றுமில்லை. ஆனால் குருக்களாட்சி ரோமாபுரி பேசுமானால் ஒவ்வொரு தேசமும் அதற்கு செவி கொடுக்கும். அது உண்மை. இப்பொழுது அவன் எங்கே இருக்கிறான் என்று பார்க்கப் போகிறோம். அது அவன்தானா? அல்லது இல்லையா? என்று பார்ப்போம், அவன் எங்கே உருவகப்படுத்திப்பட்டிருக்கிறான் என்று பார்ப்போம். தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் (ஐசுவரியம்) மேல் ஒரு ஸ்திரி உட்கார்ந்து இருக்கக் கண்டேன். 195. தவறான ஞானஸ்நானம், தவறான பொருளாதாரம், நிர்வாகம், குருட்டுத் தனமாக ஜனங்களை வழி நடத்துதல், நீங்கள் வெறுமனே சபைக்கு வந்து உங்களுடைய பாவ அறிக்கை முதலானவைகளைச் செய்யுங்கள் " மரியாளே வாழ்க'' என்று கூறுங்கள். பொருத்தனைகளைப் பண்ணிக் கொள்ளுங்கள். அறியாமைகள், அர்த்தமற்றவைகள், நல்ல சிந்தையைக் கொண்ட ஜனங்களால் இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசுவாசிக்க முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏழு தலைகளையும். 196. அங்கே மீண்டுமாக சுற்றி எங்குமுள்ள அதே பிசாசு, வலுசர்ப்பம், மிருகம் எல்லாக் காரியங்களும் ஏழுதலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதான, 197. "அந்த ஸ்திரி". ஸ்திரி அது சபையைக் குறிக்கிறது. மிருகம் என்பது அவளுக்கு இருந்த ரோமன் கத்தோலிக்க சபைக்கிருந்த வல்லமையைக் குறிக்கின்றது. ஆனால் அது ரோமன் கத்தோலிக்க வல்லமையாகும். ஆனால் இங்கே இப்பொழுது சபை பேசிக்கொண்டிருக்கிறது. அந்த ஸ்திரி இரத்தாம்பரமும், சிவப்பான ஆடையும் தரித்து பொன்னினாலும், இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும், சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புக்களினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்த பொற்ப்பாத்திரத்தை தன் கையிலே பிடித்திருந்தாள். 198. அதோ அவள் இருக்கிறாள் ஏதோ சபையாக, உங்களுக்குத் தெரியும், அப்படியாய் இல்லையா? அங்கே இருந்துதான் ஆக வேண்டும். அங்கே அவள் உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறாள் தொடர்ந்து வாசித்து அவள் யார் என்று பார்ப்போம். மேலும் "இரகசியம் மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியின் அருவருப்புகளுக்கும் தாய்” என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 199. சரி, புரோட்டஸ்டன்ட் காரர்களே இங்கேதான் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள். அவள் ஒரு வேசி என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். (ஆனால் அவள் என்ன குமாரர்களுக்கா ) தாய், வேசிகளுக்குத்தாய் அப்படியானால் அது ஒரு ஸ்திரியாக இருக்க வேண்டும். அது சரிதானே? அப்படியானால் அவைகள் சபைகளாக இருக்கும் அது சரிதானே? அப்படியானால் அவள் தாய்சபை அவள் தாய் சபை இல்லையா? மார்ட்டின் லுத்தர் எங்கிருந்து வந்தார்? கத்தோலிக்கத்தில் இருந்து வந்தார். இவைகளெல்லாம் எந்த அவயவத்தில் இருந்து வந்தது? கத்தோலிக்கத்தில் இருந்து, அதே உபதேசங்களை கொண்டு வந்தது, நீங்கள் அதற்கு தலை வணங்குகிறீர்கள். 200. ஜெபர்சன்வில்லில் ஒரு நற்பண்புள்ள ஸ்திரியினால் ஒரு உண்மையான, நல்ல கன்னிகையான, ஒரு பெண்ணைக் கொண்டு வரமுடியும். அது சரியே. அவள் விரும்பினால் நேர்மையாக ஜீவிக்க முடியும். அதே விதமாக லுத்தரன், பாப்டிஸ்ட், பிரஸ் பெடரியன், மெதெடிஸ்ட் முதலான சபைகளும், அவர்களுடைய ஸ்தாபனங்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்த வரைக்கும் நேர்மையான பாதையில் தான் சென்றார்கள். ஆனால் இப்பொழுதோ படக் காட்சிகளுக்கும், நடனங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், புகைக்கவும் மற்ற எல்லா காரியங்களையும் செய்கிறார்கள். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தங்கிவிடுவார்கள். அது என்ன? ஏனென்றால் உங்களுடைய வேசியானவள் அவளுடையத்தாயைப் போலவே நடந்து கொள்கிறாள். அது சரியாக அப்படியே, அது சரியாக அப்படியே இருக்கிறது. 201. சுபாவம் எங்கிருக்கிறது என்று சற்றுப்பார்ப்போம். அவள்" வேசிகளுக்குத்தாய்'' என்று வேதம் கூறுகின்றது. அது வேறு யாருமல்ல, அஞ்ஞான ரோமாபுரியே அல்லது திருமதி. போப்-பின் ரோமாபுரி கத்தோலிக்க சபை என்று யாவருக்கும் தெரியும். இன்னும் ஒரு நிமிடத்தில், பூமியின் மேல் அவளுடைய ஸ்தானத்திலே அவளை பொருத்தி சரியாக அவள் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன் சரிதானே? அவள் எங்கே இருக்கிறாள்? அவள் யார்? வேதம் அவ்விதமாகக் கூறுகின்றது, நான் அல்ல வேதம் கூறுகின்றபடி அவளைத் தொடர்ந்து அவள் அநேக குமாரத்தி சபைகளை பின்னர் கொண்டு வந்தாள். சரி இப்பொழுது மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், லுத்தரன் முதலான சபைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கவனியுங்கள் வேசிகளுக்கு தாய் அவர்கள் சரியாகத்தான் ஜீவித்தார்கள். ஆனால் வெளிச்சம் பிரகாசிக்கத் துவங்கிய போது, 202. கோடைக்காலத்தில் இருக்கும் ஒரு கூட்ட கரப்பான் பூச்சிகளைப் போன்று, பாதையில் கிடக்கும் பழைய சோளம், இதைப் போன்ற காரியங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தவைகள், விளக்கைப் கொளுத்தியவுடன், வெளிச்சம் அதன் மேல் பிரகாசித்த உடனே அடைக்கலம் தேடி அவ்வளவு வேமாக இருளுக்குள் அவைகள் ஓடிவிடும். 203. அநேக சம்பிரதாய, குளிர்ந்துபோன தேவ பக்தி இல்லாத சபைகளிடம் நீங்கள் சுவிசேஷத்தை அல்லது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் பிரசங்கித்து அவைகளை நீங்கள் கவனியுங்கள் "அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நாங்கள் விசுவாசிப்பதில்லை, நான் விசுவாசிப்பதில்லை. ஏன்? துவக்கத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள் அது சரியே அது முற்றிலும் சரியே. 204. நான் உங்கள் சபைக்கு எதிராக ஒன்றையும் கூறவில்லை சகோதரனே அங்கே உங்களிடத்தில் ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரத்தினங்களாக இருக்கிறார்கள். கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிராக நான் எதையுமே கூறவில்லை, பிரான்ஹாம் கூடார ஜனங்களை நான் நேசிக்கும் விதமாகவே நான் கத்தோலிக்க ஜனங்களையும் நேசிக்கிறேன். நண்பர்களே நான் உங்களுக்கு எதிராக கூச்சலிட முயற்சிக்கவில்லை. மெதடிஸ்ட்களே, பாப்டிஸ்ட்களே, பிரான்ஹாம் கூடாரத்தாரே உங்களை அல்ல, நான் உங்களை எதிர்த்துக் கூச்சலிடவில்லை. உங்கள் மேல் சுமத்தும்படியாக பிசாசை அனுமதிக்கின்ற பாவத்தை எதிர்த்து நான் கூச்சல் இடுகிறேன். நீங்கள் சபைக்கு போகிறதனால் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். "ஒரு மனிதன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்" என்று இயேசு கூறினார். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும்போது விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அது நேராக கர்த்தரித்திலிருந்து வருகிறது. சகோதரனே, ஆனால் அது நேராக வேதத்தில் இருந்து தேவனிடத்திலிருகிறது வருகிறது. இந்த அடையாளங்கள் ஒருவேளை பின்தொடரலாம் என்று இயேசு ஒரு போதும் கூறவில்லை. ஆனால் அவைகள் அவர்களைப் பின் தொடரும் என்றுதான் கூறினார். ஒ. அது அப்போஸ்தவர்களுக்கு என்றும் ஆரம்பத்தில் இருந்த அப்போஸ்தவர்களைச் சுற்றி மட்டுமே இருந்தது என்றும் நான் விசுவாசிக்கிறேன். அதெல்லாம் அப்பொழுது ஆரம்ப காலத்தில் இருந்தது” என்று அவர்கள் கூறுகிறார்கள். 205. நேற்று இரவு நாம் தியானித்த செய்தியில் அவருடைய கரத்தில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு சபை காலத்துக்கும் வெளிச்சமாக, ஒவ்வொரு நட்சத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அது சரியா? நம்முடைய பாடத்தின் துவக்கத்தில் நாம் பார்த்தது போன்று அங்கே ஒரு அப்போஸ் தலன், அங்கே ஒரு அப்போஸ்தலன், அங்கே ஒரு அப்போஸ்தலன், இருப்பது போன்று அவர்கள் ஏழு சபைக் காலங்களுக்கு அனுப்புவதற்காக தேவனுக்கு முன்பாக இருக்கின்ற ஏழு ஆவிகளாம். 206. ஓ... சகோதரனே, ஏதோ சிறு பாப்டிஸ்ட் அல்லது மெதடிஸ்ட் உபதேசத்துடன் நீங்கள் அப்படியே சுற்றி நடந்து சமாளிக்கலாம், ஆனால் வேதாகமத்தின் வெளிச்சத்திலே ஒருமுறை அதை சற்று நோக்கிப்பாருங்கள் அதுசரி... ஆமென்... இப்பொழுதே நான் பக்தி பரவசம் அடைகிறேன். ஆமென்! ஆம் ஐயா , கவனியுங்கள், சகோதரனே, அங்கேதான் காரியம் அது அரைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் சவுக்கடி இல்லாமல் எந்த ஒரு நன்மையும் செய்யாது. 207. அம்மா அங்கே பின்னாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு குடிப்பதற்கு விளக்கெண்ணையைக் கொடுப்பார்கள். நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தோம். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட சோள ரொட்டியும் பீன்ஸ்-ம் தான் சாப்பிடக் கொடுப்பார்கள். எப்படி இருந்தாலும் நான் அதிகப்படியான மருந்து சாப்பிடவேண்டியிருக்கும். சனிக்கிழமை இரவுகளில் அவர்கள் எப்பொழுதும் எனக்கு விளக்கெண்ணை சாப்பிடும் படியாக கொடுப்பார்கள். சனிக்கிழமை இரவு இந்தவிதமாக என் மூக்கைப் பிடித்துக் கொண்டு குடிப்பேன். நான் இதை விளையாட்டாகச் சொல்லவில்லை. நான் என்னுடைய மூக்கைப் பிடித்துக் கொண்டு "அம்மா என்னால் இதை குடிக்க முடியவில்லையே, என்னை அது அவ்வளவாய் சுகவீனப்படுத்துகிறதே" என்பேன். அதற்கு அவர்களோ; "அது உன்னை சுகவீனடப்படுத்தவில்லை என்றால் அது ஒரு நன்மையும் செய்யாது'' என்பார்கள். 208. அதே விதமாகத்தான் இதுவும் கிளர்ச்சியை உண்டுபண்ணும், அது உன்னுடைய ஜீரண உறுப்புக்களை நன்றாக வேலை செய்யவைக்கும், அதன் மூலமாக உங்களால் முழு சுவிசேஷத்தையும் ஜீரணிக்க முடியும். 209. நீதிமானாக்கப்படுதல் என்ற செய்தியுடன் லுத்தரன்கள் வந்தார்கள். ஏன்? நாங்கள் தான் சபை ஆம் ஐயா என்று கூறி தங்களை ஸ்தாபனம் ஆக்கிக் கொண்டனர். 210. ஜான் வெள்லி பரிசுத்தமாக்குதலை கண்டார், "நான் அதை வித்தியாசமாக காண்கிறேன்" என்று அவர் கூறினார். அதெல்லாம் சரிதான், லுத்தர்,. "இதுதான் காரியம்” என்றார் அவர் என்னவாய் இருந்தார்? லூத்தர், அவருடைய காலத்தின் நட்சத்திரமாக இருந்தார். ஆனால் வெஸ்லியும் இங்கு இருக்கிறார் சரி. 211. பிறகு எல்லா லூத்தரன்களும் பரணைகளுக்கு திரும்பி போய்விட்டனர் ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியை மறந்துபோய்விட்டனர். எல்லோரையும் என்று கூறவில்லை லுத்தரன் சபை, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட லூத்தரன் சபை, நல்ல லூத்தரன் மனிதர்களை இன்னமும் உடையவர்களாக இருக்கிறது. அது சரியே, அவர்கள் யாவரும் அந்தக் காலத்தின் சபைக்குள்ளாகப் போய்விட்டார்கள். சரி, தொடர்ந்து வந்தார் வெஸ்லி, ஜனங்களை அவருடைய காலத்தின் ஊடாக கொண்டு சென்றார். 212. பின்னர் உங்களுக்குத் தெரிந்த முதலாவது காரியம், வெஸ்லியின் காலத்திற்கு பிறகு பெந்தகொஸ்தே எழும்பி வந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியையும் பாஷைகளில் பேசுவதையும் பெற்றுக் கொண்டனர். என்னே. 213. மெதடிஸ்ட்களும், நசரேயன்களும், யாத்ரீக பரிசுத்தர்களும், "அது பிசாசு" என்றார்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியை தூஷித்தீர்கள். இன்றைக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள் அது சரி. நீங்கள் சரியாக அதைத்தான் செய்தீர்கள். நீங்கள் நிச்சயமாய் செய்தீர்கள், நீங்கள் வெளிச்சத்தில் நடக்கத் தவறி விட்டீர்கள். 214. தேவன் தம்முடைய வாயிலிருந்து வாந்திப்பண்ணி போடும் அளவிற்கு இந்த லபோதிக்கேயா சபை காலத்தில் பெந்தகொஸ்தேயினராகிய நீங்கள் அவ்வளவு வெதுவெதுப்பாகப் போய்விட்டீர்கள். சரியா? முற்றிலும் சரியே. 215. பாஷைகளில் பேசுவதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்கிறீர்களா? ஆம் ஐயா, நீர் எப்பொழுதாவது அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறீரா? ஆம் ஐயா! அதற்காக நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம் ஐயா! அநேச சமயங்களில் நான் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறேன். அது தேவனுடைய வல்லமை என்று நான் விசுவாசிக்கிறேன். அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதின் முன் அயைடாளம் என்று நான் விசுவசிப்பதில்லை. ஆனால் அங்கே தேவனுடைய வல்லமையானது உங்களை அந்நிய பாஷைகளில் பேச வைக்கிறது, அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடரும் என்று நான் விசுவாகிக்கிறேன். ஆம் ஐயா! 216. சாத்தான் ஒரு பழை சோளக்கொல்லை பொம்மையை அங்கு வைத்தான், யாரோ அதை பரிகசித்து பரிசுத்த ஆவியைப் பெற்றது போல் நடந்து கொண்டார்கள் யாத்ரீக பரிசுத்தர்களும், நசரேயர்களும், இன்னும் மற்ற யாவரும் திரும்பி பார்த்து "ஓ.. அதில் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். 217. ஓ... இரக்கம் நீங்கள் பரிசுத்த ஆவியை உடையவர்களாய் இருந்து அல்லது தேவனுடைய ஒரு பாகமாக இருதயத்தில் வைத்திருந்து, நீங்கள் இருக்க வேண்டிய விதத்தில் பரிசுத்தமாக இருந்தால் அதை தேவனுடைய வல்லமை என்று அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்கள். "நீங்கள் மோசே -ஐ அறிந்திருந்தால் என்னையும் கூட அறிந்திருப்பீர்கள்" என்று இயேசு கூறவில்லையா? நித்தியமாக உங்களை சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்திய பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக பரிசுத்தமாகுதல் இருக்குமாயின், நீங்கள் அதை உடையவர்களாய் இருந்தால் அது வரும்போது எஞ்சியுள்ள மற்றதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். 218. இந்த கரம், இந்த கரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது. இந்த தலையானது இந்த பாதத்தை அடையாளம் கண்டுகொள்கிறது. அது சரீரத்தின் ஒரு பகுதியாய் இருக்கிறது. 219. ஒன்பது விதமான ஆவிக்குரிய வரங்கள் இருக்கிறது என்று வேதம் கூறுகின்றது. தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், பாஷைகளில் பேசுதல், பாஷைகளை வியாக்கியனித்தல், தெய்வீகசுகம் முதலானவைகள், அதன் ஒவ்வொரு துணிக்கையையும் அது அடையாளம் கண்டு கெள்ளும். 220. ஓ... குளிர்ந்து போனவர்களே “நான் அதனுடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறீர்கள். ஓ, இங்கே நீங்கள் வெதுவெதுப்பாக இருக்கிறீர்கள் இல்லையா? அது உண்மையே ஏன்? ஏன்? நீங்கள் ஸ்தாபனம் ஆக்கிக் கொண்டீர்கள். உங்களுடைய சபை அந்தவிதமாகக் கூறுகின்றது. அதன் காரணத்தினால் தான் உங்களால் அதைச் செய்யமுடிகிறதில்லை. 221. ஆனால் மெதடிஸ்ட்களாகிய உங்களில் அநேகர் வெளியில் வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள், பாப்டிஸ்டுகளாகிய உங்களில் அநேகர் வெளியே வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள். பாப்டிஸ்டுகளாகிய உங்களில் அநேகர் வெளியே வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள். ஆம் ஐயா, ஹோலினஸ் கூட்டத்தராகிய உங்களில் அநேகர் வெளியே வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள். ஆம்... ஏன்? சபை என்ன கூறுகின்றது என்பதை குறித்து நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் வெளிச்சத்தில் நடந்தீர்கள் ஆமென். என்ன நடந்தது என்பதைக் குறித்து நீங்கள் கவலைப்படவில்லை. அது கர்த்தரால் உண்டானது என்று அறிந்து அதற்குள்ளாக நேராக நடந்து சென்றீர்கள். 222. அந்த வயதான அம்மா, அவர்களுடைய வயதான தாய் வேண்டுமானால் அவள் மட்டும் அங்கே இருக்கட்டும் அவளுடைய தாயார் அன்றைக்கு நடந்து கொண்டதைப் போலவே, நடந்துகொள்கிறாள். ஒரு வேசி அவள் ஸ்தாபனமாக்கிக் கொண்டாள். கத்தோலிக்க சபை தன்னை ஒரு ஸ்தாபனமாக்கிக் கொண்ட போது, தொல்லையின் துவக்கத்தில் கொள்கையாய் இருந்தது. அதற்கு பிறகு லூத்தரன் சபை அவளை பின்பற்றி தன்னை ஒரு ஸ்தாபனம் ஆக்கிக் கொண்டது. பின்னர் மெதடிஸ்ட் சபை அவளைப் பின்பற்றி தன்னை ஒரு ஸ்தாபனம் ஆக்கிக் கொண்டது. பின்னர் பாப்டிஸ்ட் சபை தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டது. இப்பொழுதோ அங்கே சுமார் 696 வித்தியாசமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பெந்தெகொஸ்தேயும் அதே காரியத்தை செய்தது. 223. மகிமை, காரியம் என்ன? ஒரு ஸ்தாபனத்திற்குள் தேவன் இல்லை என்பதை அவர் நிருபிக்கிறார் அவர் பரிசுத்த ஆவியானவராய் ஆவியில் இருக்கிறார். அல்லேலூயா.. அல்லேலூயா ஆம் ஐயா, 224. உன்னுடைய ஸ்தாபனம் என்ன என்பதை குறித்து அவருக்கு கவலையில்லை, அது அர்த்தமற்றது, அது கத்தோலிக்க மார்க்கத்துடன் (கொள்கை) தொடர்பு கொண்டதாய் இருக்கிறது. அதற்குள்ளாகப் போய் அதற்குள்ளாக இருந்துவிட்டது. அவளுடைய அடையாளத்தையே நீ பெற்றுக் கொண்டாய். "என் ஜனங்களே, அவருடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளைவிட்டு வெளியே வாருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்,” என்று தேவத்தூதன் கூறவில்லையா அவளுடைய அசுத்தமான காரியங்களை தொடாதீர்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார். 225 அந்த மிருகத்தின் முத்திரையையாவது, அல்லது அதன் நாமத்தின் இலக்கத்தையாவது, தரித்துக் கொள்கிற எவனும், இதை ஆராய்ந்து பார்க்க அவகாசம் இருந்தால் நலமாக இருக்கும் எனக்கோ நேரமாகிவிட்டது. அவனுடைய பெயரின் எழுத்தக்கள் என்ன? "புரோட்டஸ்டன்டிஸம்", அதைப் போன்றதான ஒரு சொரூபத்தை அதற்கு உண்டாக்குவோமாக, நாம் ஒரு ஸ்தாபனத்தை உண்டோக்குவோமாக, நம்முடைய சபையானது கத்தோலிக்க சபையைப் போன்று, அவ்வளவு பெரியதாக இருக்கின்றது. இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். "பெரிய சபைகள் அவர்களுக்கு உண்டு, நாமும்கூட அப்படியே செய்கிறோம், இந்தப் பட்டணத்தின் பெருங்குடிகள் நம்முடைய சபையிலும் கூட இருக்கிறார்கள், அவர்களுடைய சபையில் அவர்களுக்கு இருப்பது போன்று, "அந்த மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவோமாக,'' வேதாகமம் என்ன கூறுகிறது. அவளை ஒரு மகாவேசி (Whore) என்றும், ஸ்தாபனங்களின் மூலமாக அது ஒரு வேசியாக (Harlot) இருக்கிறது. 226. ஆனால் ஜீவிக்கின்ற தேவனுடைய சபையோ சுதந்திரமா இருக்கிறது. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுடீதலை ஆவீர்கள், அதைவிட்டு வெளியே வாருங்கள், தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருங்கள். "தேசங்கள் உடைகின்றன ,இஸ்ரவேல் விழித்து எழுகிறது இவை வேதம் முன்னரைத்த அடையாளங்களாகும் புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்பட்டிருக்கிறது,துயரங்கள் சூழ்ந்திருக்கின்றது, ஓ... சிதறடிக்கப்பட்டவர்களே, உங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வாருங்கள், மீட்பின் நாள் சமீபமாய் இருக்கின்றது, புருஷருடைய இருதயங்கள் தவறிப்போகிறது, தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு உங்கள் விளக்குகளை சுத்தப்படுத்தி தெளிவாக மேல் நோக்கி பாருங்கள், உங்களுடைய மீட்பு சமீபமாக இருக்கிறது. ஆமென்!'' 227. காரியங்கள் எப்படியாய் நடந்து கொண்டிருக்கின்றன, இந்த கடைசி நாட்களில் "பயப்படாதே சிறுமந்தையே உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாக இருக்கிறார், அவரோடுகூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருப்போம்” என்று அவர் கூறினார். 228. மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள் பெந்தேகோஸ்தே - யினரைப்பார்த்து சிரிக்கிறீர்கள். 229. பெந்தெகோஸ்தே ஸ்தாபனமாக ஆனபடியினாலே, அதற்கு ஒரு நல்ல பழையமாதிரியான சுவிசேஷ அடி தேவையாய் இருக்கிறது என்று நான் கூறுகிறேன். மிகப்பெரிய பெந்தேகோஸ்தே சபையானது அசெம்பிளீஸ் ஆப் காட் மற்றும் சபைகளின் ஐக்கியத்தோடு சேர்ந்து கொண்டு, குளிர்ந்து போனதும் அலட்சியமாகவும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மிக மோசமாக நடத்தப்பட்டதை நான் கண்டேன் என்றால் அது பெந்தகோஸ்தே போதகர்களால் நடத்தப்பட்டதுதான். ஆகையால் பெந்தேகொஸ்தே சபையை சார்ந்திருந்த காரணத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். 230. தேவனுடைய ஆவியினாலே உண்மையாக ஞானஸ்தானம் பண்ணப்பட்டு, அதாவது பரிசுத்த ஆவியினால் அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அவரோடு இணைக்கப்பட்டு, அற்புதங்களும், அடையாளங்களும் தொடர்ந்து போகும்போது மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அடையாளங்கள் தீர்க்கத்தரிசிகளைப் பின் தொடர்ந்தது, அடையாளங்கள் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தது, அடையாளங்கள் அப்போஸ்தவர்களை பின் தொடர்ந்தது அவர் மீண்டுமாய் திரும்பி வருமட்டுமாய் "இந்த அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும்" என்று அவர் கூறினார். அந்தவிதமாகவா வேதம் கூறுகின்றது சகோ.பிரான்ஹாம் நீங்கள் உலகமெங்கும் போய் இந்த வல்லமையையும் அதன் பிரசங்கியுங்கள். "அது அப்படி சொல்கிறதா? சகோ.பிரன்ஹாம்?" 231. "உலகமெங்கும் போய் வல்லமையை பிரசங்கம் செய்து ஒவ்வொரு தேசங்களிலும் அதை செயல்படுத்துங்கள். ஒரு இலட்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னும் அதைக் கேள்விப்படாமலேயே இருக்கிறார்கள். இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும்", "ஒவ்வொரு தேசத்திலும்" "அவர்களைப்" பின் தொடரும். 232. மகிமை, ஒ... என்ன? ஒருக்கால் எனக்குப் பைத்தியம் என்று நீங்கள் கருதலாம், சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் இந்த பழங்கால மார்க்கத்தை நான் நேசிக்கிறேன். ஆம் ஐயா, நீ கிறிஸ்துவுக்குள் நங்கூரம் இடப்பட்டிருக்கிறாய். 233. மிருகத்தின் முத்திரை என்ன என்பது உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? அது விசுவாசதுரோகத்தின் அறிகுறியாக இருக்கின்றது. நல்லது, "நான் இந்த சபையை சேர்ந்தவன், நான் அடுத்தவனைப் போல அவ்வளவு நன்றாக இருக்கிறேன். நான் இந்தச் சபையைச் சேர்ந்தவன்" என்று கருதும் ஒரு நபரைப்போன்று இருக்கிறது. நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உங்கள் சபை ஸ்தாபனமானது எங்கிருந்து வந்தது என்பதை உணருகிறீர்காளா? நீங்கள் உணருகிறீர்களா? 234. “அந்த மிருகத்தை வணங்குகிறவன், அதன் முத்திரையை அல்லது நாமத்தின் இலக்கத்தை, இப்பொழுது கவனியுங்கள், அவர்களுடைய நெற்றியிலாவது, கைகளிலாவது பெற்றுக் கொள்வார்கள், அதாவது அதைப்பற்றின அறிவை அல்லது மரணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்” என்று வேதம் கூறுகின்றது. அதனால் உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு சின்னத்தை உடையவர்களாய் இருப்பீர்கள் என்று அர்த்தமல்ல, அது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை, அது வெளிப்படையாய் பேசுகிறது அல்ல, அது ஆவிக்குரிய பிரகாரமாக பேசுகிறதாய் இருக்கிறது. 235. அவனை நன்றாக கூர்ந்து கவனித்து வேத வாக்கியங்களை குறித்து அவன் என்ன அறிந்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவனைக் கவனித்து அவன் எங்கே போகிறான் என்று பாருங்கள். “எவனாவது ஒருவன் இந்த உபதேசத்தை உடையவனாக இல்லை என்றால் அவனுக்குள் வெளிச்சம் இல்லை” என்று வேதம் கூறுகிறது புரிகின்றதா? பார்த்தீர்களா? அவன் எங்கே போகிறான் என்று கவனியுங்கள் அவன் என்ன செய்கிறான் என்று கவனியுங்கள். 236. அவன் கூறுவான் "நான் இதைச் சார்ந்தவன், நான் ஒரு புரோட்டஸ்டண்ட், ஆம் ஐயா, நான் இந்த ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவன்...... ஆம் ஐயா, என்று கூறுவான். ஞாயிற்றுக்கிழமையிலும், மழையிலும், சபைக்குப்போக வெளியில் வருவது அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்கிறதாய் இருக்கும். அவன் ஜெபக்கூட்டத்திற்குப் போவதற்குப் பதிலாக கீழே போகிறான். சபை முடிந்த பிறகு தொலைக்காட்சி பார்ப்பான். அவன் குடிக்கிறான், இப்படியாய் தொடர்ந்து காரியங்களை செய்து உலகத்தைப்போல நடந்துகொள்கிறான். அப்படி இருந்தும் அவன் சபையைச் சேர்ந்தவனாக இருக்கிறான். நினைவிருக்கட்டும் அது பாவத்தின் முத்திரையாக இருக்கிறது. 237. நாம் இன்னுமாக சற்று தொடர்ந்து வாசிப்போம், துரிதமாக, பின்னர் நான் முடித்து விடுகிறேன். நமக்கு சற்றே நேரம் இருக்கிறது, இப்பொழுது நாம் 6-ம் வசனத்தை வாசிப்போம். “அந்த ஸ்திரியானவள் (சபை) பரிசுத்தவான்களின் இரத்தத்தால் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டடேன். 238. "பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறி கொண்டிருக்கிறாள்.'' உங்களுக்குத் தெரியும், வேதாகம் கூறுகின்றது அவள் அழிக்கப்பட்டபோது, பூமியின் மீது மரித்த அழிவுள்ள ஒவ்வொன்றினுடைய குற்றமும் கத்தோலிக்க சபைக்குள் காணப்பட்டது. சரியாக அப்படியே, துவக்கத்தில் இருந்தது, இயேசுவைக் குறித்த சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதை கண்டேன். (இப்பொழுது யோவான் பேசிக் கொண்டிருக்கிறான்.) “அவளைக்கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்” 239 யோவான் கூறினான் இப்பொழுது நாம் இங்கே பார்க்கலாம். “நான் அவளை நோக்கிப் பார்த்தேன், அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்,” ஒரு அருமையான பெரிய சபை அவளிடத்தில் இருந்து பிறந்து வெளிவந்த ஒரு கூட்ட சபைகளை அவள் உடையவளாய் இருந்தாள், " வேசிகளுக்குத் தாயாக” இருந்தாள். நான் அப்படியே பின்னால் திரும்பி பார்த்தேன். எப்படி அந்த ஸ்திரியால் முடிந்தது என்று பார்த்தேன். அவள் அந்தக் கள்ளப் போதனையைக் கொடுத்துக் கொண்டு, எல்லா இராஜாக்களும், மகத்தான மனிதர்களும் அதனால் வெறி கொண்டிருக்கும்படியாகச் செய்தாள். அவளுடைய குமாரத்திகள் அதே காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் அவளை நோக்கிப் பார்த்து அவ்வளவு அழகுள்ளவள் என்று கண்டேன். 240. வேத வார்த்தைகளில் ஒரு இடத்தில் “நான் ஒரு இராணியைப் போன்று அமர்ந்து கொண்டு எனக்கு ஒரு குறைவும் இல்லை” என்று கூறுகிறார். நான் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நான் அவளை நோக்கிப் பார்த்தேன். மிகுந்த வியப்புடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். 241. பின்னர் யோவான் கூறுகிறான் அப்பொழுது அந்த தூதனானவன் என்னை நோக்கி “ஏன் ஆச்சரியப்படுகிறாய், இந்த ஸ்திரியினுடைய இரகசியத்தையும் ஏழு தலைகளையும், பத்துக் கொம்பகளையும் உடையதாய் அவளை சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.” 242. நாம் சரியாக இருக்கிறோமா என்று பார்ப்பபோமா? நாம் கத்தோலிக்கத்தை சரியாக உடையவர்களாய் இருந்தால் அப்பொழுது அதை புரோட்டஸ்டன்ட் கொள்கை பின்பற்றி வந்து கொண்டிருக்கிறது என்று அறிவோம். எனவே அதைப் புரிந்து கொள்ள போதுமான புத்திகூர்மை உங்களிடத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். கவனியுங்கள், “நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது இப்பொழுது இல்லை. 242. அந்த மிருகம்,” இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இங்கே எத்தனை இராஜாக்கள் இருந்தார்கள் எத்தனை இராஜாக்கள் விழுந்தார்கள், ஒருவன் இனிவர வேண்டும் என்று கூறுவதை நீங்கள் கவனிக்கலாம். அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப் போகிறது. 244. வேதாகமத்தின் மேல் அல்ல, ஒரு கூட்ட மூட பக்தி காரியங்களிலிருந்து உண்டாக்கப்பட்டதல்ல. அதற்கு எந்த பின்னனியும் கிடையாது. "உத்தரிக்கும் ஸ்தலம் " உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. "மாம்சம் புசிக்க கூடாது", "பாதிரியார் திருமணம் செய்து கொள்ளக்கூடாது." "பாவசங்கீர்த்தனம்" முதலான காரியங்களை எங்கிருந்து பெற்றீர்கள்? எங்கிருந்து இவைகளைப் பெற்றீர்கள்? அதைக் கண்டறிய அங்கே எங்கேயும் இடம் இல்லை. அது பாதாளத்திலிருந்து மேல் ஏறி வந்தது, வேதம் அந்தவிதமாகக் கூறுகிறது. அந்த மிருகம், அந்த அதிகாரம் அதற்கு இருந்த உபதேசங்கள் பாதாளத்தில் இருந்து ஏறிவந்து நாசமடையப் போகிறது. 245. "நாசம் எங்கே இருக்கிறது?" நரகத்தில் எங்கே இருந்து வந்ததோ சரியாக அந்த இடத்திற்கே திரும்பிப் போகின்றது. உலகத் தோற்ற முதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராத பூமியின் குடிகள் இருந்ததும் இராமல் போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 246. இப்பொழுது புரோட்டஸ்டன்ட் சபையார் இப்படிக் கூறுகிறார்கள். அவர்கள் "நாங்கள் இயேசுக் கிறிஸ்துவை விசுவசிக்கிறோம். அவர் எங்களுடைய சொந்த இரட்சகராய் இருக்கிறார்” என்று கூறும்போது அது எப்படி இருக்க முடியும்? சகோதரனே பிசாசும்கூட விசுவாசிக்கிறதே. 247. அது ஒரு புதிய பிறப்பு, மறுபடியும் பிறந்ததாக இருக்க வேண்டும் நீங்கள் மறுபடியுமாக பிறந்த போது உங்கள் பெயர் ஆட்டுக்குட்டினவருடைய ஜீவபுத்தகத்ல எழுதப்பட்டது. 248. நீங்கள் கூறுகிறீர்கள். "நான் அடிக்கடி வியப்பது உண்டு, அது என்ன மற்ற ஒருவனைப் போன்று நான் அவ்வளவு நல்லவனாக இல்லையே, அந்த பரிசுத்த உருளையைப் போன்று நான் அவ்வளவு நல்லவன் இல்லையா? நான் அவர்களைப் போல புத்திசாலியானவன், நான் பட்டங்கள் பெற்றிருக்கிறேன். நான் ஒரு கல்லூரியிலிருந்து வெளிவந்துள்ளேன். நான் ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் எனக்கு முன்னதாகவே என்னுடைய ஜனங்கள் சபை அங்கத்தினர்கள், உங்களைப் போன்று நானும் நல்லவன் இல்லையா" 249. "முழு உலகமும், புரோட்டஸ்டன்ட் சபை, மற்ற எல்லோரும்" ஆச்சரியப்பட்டார்கள். அதாவது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராத மற்ற யாவரும் என்று அது கூறுகின்றது. 250. ஏன்? பெயர்கள் எழுதப்பட்டது. அவர்கள் ஆபிரகாமின் வித்தாய் இருந்தார்கள் வாக்குத்தத்தத்தின்படி அவர்கள் சுதந்திரராயும், உலகத் தோற்றத்திற்கு முன்னர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அக்காரணத்தினால் தான் அவர்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். இங்கே கவனியுங்கள் அவன் என்ன கூறுகிறான் என்று நோக்குங்கள், இதை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் இவைகளைக் கவனியுங்கள், ஞானம் உள்ள மனம் இதிலே விளங்கும். 251. இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கப் போகிறேன். பரிசுத்த ஆவியின் வரங்களில் ஞானம் ஒன்றா? அது சரிதானா? I. கொரிந்தியர் 12-ல் வரங்கள் எல்லாம் சபையில் இருக்கின்றது என்று வேதம் போதிக்கின்றது. ஞானம் வரங்களில் ஒன்று என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள். அந்நிய பாஷைகளில் பேசுவது இல்லை என்று எப்படி நீங்கள் கூறமுடியும்? பாஷைகளின் வியாக்கியானம் இல்லை என்று எப்படி கூறமுடியும்? தெய்வீக சுகம் இல்லை என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? நான் ஒரு சரீரமாய் இருந்தால் இந்தப்பக்கத்தில் ஒரு கரமும், அந்தப்பக்கத்தில் ஒரு கரமும், ஒரு பாதமும் இருக்கும் உங்களால் எப்படி கரம் அங்கே இருக்கிறது, பாதம் கிடையாது என்று கூறமுடியும்? பவுல் என்ன கூறினார் என்று உங்களால் காணமுடியவில்லையா? 252. இப்பொழுது கவனியுங்கள், அவன் கடைசி நாட்களில் நேரடியாக சரீரத்தில் பேசிக் கொண்டிருக்கிறான். “ஞானம் உள்ள மனம் இதிலே விளங்கும்” என்று கூறுகிறார். ஓ நான் இதை விரும்புகிறேன்... ஒ என்னே? இதுதான் உங்களை அதிர்ச்சி அடையச் செய்யப் போகின்றது இதை சற்று கவனியுங்கள். சரி..... ஞானம் உள்ள மனம் இதுதான். அந்த பரிசுத்த ஆவியின் வரங்கள் எல்லாக் காலத்திலும் வரவில்லை என்றால், அவர் ஏன் இதைக் கடைசி நாட்களுக்கென்று பேசுகிறார், இந்த கடைசி நாட்களில் சபைகளில் வரங்களே இல்லாதிருக்க போகிறது என்றால் அப்படியென்றால் அவர் ஏன் அதை நேரடியாக கடைசி நாளுக்கென்று பேசுகிறார்? ஞானம் உள்ள மனம் இதிலே விளங்கும். ஏழு சபைகளும் (அந்த ஏழு தலைகளும் ) அந்த ஸ்திரி உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். 253. எத்தனை மலைகள்? ஏழு மலைகளின் மேல் ஒரு சபையானது அமர்ந்திருந்தாலும், உலகத்தில் எத்தனை பட்டிணங்களில் அப்படியாக இருக்கிறது? ஒன்றே ஒன்று, அது எங்கே இருக்கிறது? ரோமாபுரியில் உள்ள வாடிகன் பட்டிணமே அது சரியா? இந்தப் பயங்கரமான மகாவேசியானவள் உலகம் எல்லாவற்றையும் வேசித்தனத்துக்குள் உள்ளாக்கி அவள் செய்த அதே காரியத்தை உபதேசிக்கும்படி ஒரு சிறு கூட்ட குமாரத்திகளை வெளியே கொண்டு வந்தாள். அவளைப்போன்று அவர்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல ஆனாலும், அவர்கள் வேசிகளாய் இருந்தார்கள், அதே காரியத்தை அவர்களுக்கு போதித்தார்கள். ''அதனுடைய துவக்கம் ரோமாபுரியில் உள்ள ஏழுமலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு ஸ்திரியாக உள்ளது அல்லது ஒரு சபையாக இருக்கும்" என்று கூறுகிறது. நான் உலகமெல்லாம் சுற்றிப்பார்த்தேன், ஏழுமலைகளின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு சபையானது எங்கே இருக்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள் .... இப்பொழுது இதை நான் வேதத்திலிருந்து வாசிக்கின்றேன். அவைகள் ஏழு இராஜாக்களாம், அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள். 254. நாம் சரித்திரத்தை எடுத்துக்கொண்டு, அப்படியே திரும்பிப் போய பாபிலோனிய இராஜ்யம் முதற்கொண்டு ரோமாபுரியில் எங்கே, ஐந்து இராஜாக்கள் விழுந்தார்கள் என்று காணலாம். ஒருவன் இருக்கிறான் நீரோ, மற்றவன் இன்னும் வரவில்லை , வரும்போது அவன் கொஞ்சகாலம் தரித்திருக்க வேண்டும், (சுமார் ஆறுமாத காலம்.) 255. "அந்த மிருகம்" ஓ... இதை சற்று நோக்குங்கள் அஞ்ஞானத்தின் ஸ்தானத்தை அதிகாரமானது எடுத்துக் கொள்ளப்போகிறது இருந்ததும், இராததுமாகிய மிருகமே எட்டாவது ஆனவனும், (இப்பொழுது கவனியுங்கள்) அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், 256. அவன் என்ன ஒரு பயங்கரமான இராஜா என்று உங்களுக்குத் தெரியும். இவன் தன்னுடைய தாயை குதிரை வண்டியின் குதிரைகள் கட்டும் நுகத்தடியில் கட்டி வீதியின் ஊடாக அவளை இழுத்துக் கொண்டுபோய் அந்த பட்டிணத்தை அப்படியே தீயினால் கொளுத்திவிட்டு குன்றின்மேல் போய் உட்கார்ந்து கின்னரம் வாசித்துக் கொண்டிருந்தான். அஞ்ஞானத்தின் ஸ்தானத்தில் வீற்றிருக்கின்ற சபையில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆவி அதே விதமான ஆவியாக இருக்கிறது. எட்டாவதானவனும் அவ்வேழில் இருந்து தோன்றுகிறவனுமாயிருக்கிறான். பின்னர் இருந்ததும், இராததுமாகிய, இருந்ததும் இராததுமாகிய, இருந்ததும் இராததுமாகிய இப்படி தொடர்ந்து போய் கொண்டே அவன் நாசம் அடையப் போகிறவனுயுமாயிருக்கிறான். 257. கர்த்த ருடைய வருகையின் நேரமட்டுமாய் இருந்து அவன் நரகத்தில் தள்ளப்பட்டான். "நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து இராஜாக்களாம், இவர்கள் இன்னும் இராஜ்யம் பெறவில்லை. இவர்கள் மிருகத்துடனே கூட ஒருமணி நேரமளவும் இராஜாக்கள் போல அதிகாரம் பெற்று கொள்கிறார்கள். 258. ஒ... நமக்கு மட்டும் அவகாசம் இருக்குமானால் இன்னும் அவர்கள் அதிகாரம் பெறவில்லை. அவர்கள் இராஜாக்கள் அல்ல, அவாகள் இராஜாக்களாக இருக்க முடியாது. அந்த கொம்புகளுக்கு கிரீடங்கள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்கிறார்கள். அது என்ன? சர்வாதிகாரிகள், முடிசூட்டப்பட்ட இராஜாக்கள் அல்ல சர்வாதிகாரிகள் ஒ... என்னே .... 259. இப்பொழுது ஒ.... நான் இதை வாசிக்கும்போது, இந்த கடைசி நாட்களில் நாம் எப்படியாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பார்க்கையில் சில சமயங்களில் என் உள்ளம் சந்தோஷத்தினால் துள்ளுகிறது. நீ கண்ட பத்துக் கொம்புகளும், பத்து இராஜாக்களாம். இவர்கள் இன்னும் இராஜ்யம் பெறவில்லை, இவர்கள் மிருகத்தோடு கூட ஒருமணிநேரம் இராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் ஒரே யோசனை உள்ளவர்கள் இவர்கள் தங்கள் வல்லமையையும், அதிகாரத்தையும் மிருகத்திற்கு கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள். ஆட்டுக்குட்டியானவர் இவர்களை ஜெயிப்பார். 260. அங்கேதான் வருகிறது அர்மெகாதன் யுத்தம், ஆயிர வருட அரசாட்சிக்கு ஆயுத்தமாக இருக்கிறது. "ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், இராஜாதி ராஜாவுமாக இருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார். (ஆடிப்போகாதீர்கள்) அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், 261. உங்களால் அல்ல அவரால், பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற நீங்கள் ஜெயதொனியை எழுப்ப வேண்டியவர்களாய் இருக்கிறிர்கள். உலகத் தோற்றத்திற்கு முன்பாக தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார். சுவிசேஷ வெளிச்சதை காண முடியவில்லை என்றால் காரணம் நீங்கள் குருடாய் இருப்பதுதான். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். பின்னும் அவர் என்னை நோக்கி அந்த வேசி உட்கார்ந்திருக்கின்ற தண்ணீர்களைக் கண்டாயே. அவை ஜனங்களும், கூட்டங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமாம். 262. வேறு வார்த்தைகளில் கூறினால் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்திரியானவள், சபையானவள், அவளுடைய உபதேசத்தை எல்லா ஜனங்களுக்கும், கூட்டங்களுக்கும், தேசங்களுக்கும் பாஷைக்காரர்களுக்கும் கொடுக்கப்போகிறாள். அதே அவள் இருக்கிறாள். அவள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறாள், அவள் அவர்கள் மேல் உட்கார்த்திருக்கிறாள், அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறாள், அவள் ஏழு மலைகளின்மேல் இரத்தாம்பரமும், சிவப்பான ஆடையும் தரித்தவளாய் உலகத்தின் ஜசுவரியத்தால் அலங்கரிக்கப்பட்டவளாய் அமர்ந்திருக்கிறாள். அதோ ... அவள் நீ மிருகத்தின் மேல் கண்ட பத்து கொம்புகளானவர்கள். 263. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் கம்யூனிஸத்தின் அதிகாரத்திற்குள் வருகிறீர்கள். அந்த வேசியைப் பகைத்து அவளை பாழும், நிர்வாணமுமாக்கி அவளுடைய மாம்சத்தை பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அவர்கள் தங்களது யோசனையை நிறைவேற்றுவதற்கும், ஒரே யோசனை உள்ளவர்களாய் இருந்து தங்களுடைய இராஜ்யத்தை மிருகத்திற்கு கொடுக்கிறதற்கும், அவர்களுடைய இருதங்களை ஏவினார். 264. அல்லேலுயா... "வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை" கவனித்தீர்களா? நீ கண்ட ஸ்திரியானவள், நீ கண்ட ஸ்திரியானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமாம் என்றார். 265. ஏழு மலைகளின் மேல் அமைந்துள்ள கத்தோலிக்க ஏகாதிபத்தியத்திற்கு புறம்பாக பூமியின் மேல் உள்ள எல்லா ராஜ்யங்கள் மேலும் ஆளுகை செலுத்துகின்ற வேற ஏதாவது ஒரு பட்டணத்தை இந்த உலகத்தில் நீங்கள் எனக்குக் காட்டுங்கள். நீங்கள் விரும்புகின்ற எவ்விதத்தில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். பரலோகத்தில் இருந்து இறங்கி வருகின்ற அந்த புதிய பட்டிணத்திற்கு புறம்பாக வேறு ஒரு பட்டிணமும் இல்லை இருந்ததுமில்லை, இருக்கப்போவதும் இல்லை அது உண்மை. 266. இப்பொழுது ஒரு நிமிடம் இதை மறுபடியுமாம் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன் அதனால் தேவன் அறியும் அறிவுள்ளவர்களாக இருந்து நாம் வாசிக்கையில் தேவன் ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது இங்கே கவனியுங்கள் நான் 13ம் அதிகாரத்தை வாசிக்கின்றேன், அதில் 15ம் வசனத்தில் இருந்து துவங்குகிறேன். 267. இப்பொழுது நாம் வருகின்றதாக காண்கிறோமே அந்த சொரூபம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (USA) இருக்கிறது. ஒரு சொரூபம். மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்தை வணங்காதவர்களைக் கொலை செய்யத்தக்கதாகவும், மிருக்கத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்கு சத்துவம் கொடுக்கப்பட்டது. (அதுதான் தள்ளிவைக்கப்படுதல் பகிஷ்காரம் புறக்கணித்தல் - Boycotting). அது சிறியோர், பெரியோர், ஜசுவரியவான்கள், தரித்திரர் அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள், தங்கள் வலது கைகளிலாவது நெற்றியிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது, நாமத்தையாவது, அதன் நாமத்தின் இலக்கத்தையாவது, தரித்துக் கொள்கிறவன் தவிர வேறு ஒருவனும் கொள்ளவும், விற்கவும் கூடாதபடிக்கு செய்தது. 268. இப்பொழுது கவனியுங்கள், முடிப்பதற்கு முன்னர் நன்றாக கூர்ந்து கவனியுங்கள், 18வது வசனம், கவனியுங்கள் இதிலே ஞானம் விளங்கும். 269. பரிசுத்த ஆவியானர் விசுவாசிகளை மீண்டுமாக அழைப்பதைப் பார்த்தீர்களா? அங்கே இருக்கின்ற அந்த சிறிய கூட்டத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில் அவர் சிறிய கூட்டத்தை அழைக்கிறார். இங்கே சபையிலே ஞானம் உள்ளவன் இதை அறிவானாக அதை அவன் புரிந்து கொள்ளட்டும். ''அந்த மிருகத்தின் இலக்கத்தை புத்தியுள்ளவன் கணக்குப் பார்க்கக் கடவன், அது மனுஷனுடைய இலக்கமாய் இருக்கிறது. ஒரு தேசத்தினுடைய இலக்கமல்ல, ஒரு மனுஷனுடையது. அவனுடைய இலக்கம் அறுநூற்றி அறுபத்து ஆறு (666) 270. சரி, அங்கே வாடிகன் பட்டிணத்தின் மேல், அதை என்னிடம் கூற வேண்டாம். என்னிடத்தில், விசுவாசத்தின் உண்மைகள்' என்ற புத்தகமும் இன்னும் மற்றவைகளும் இருக்கிறது, புரிகின்றதா? அங்கே உயரே வாடிகள் பட்டிணத்தில் தேவனுடைய குமாரனின் பிரதி நிதியாக போப் பானவர் இருக்கிறார். எனக்கும், கத்தோலிக்க நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கே அமர்த்திருக்கிறார்கள், அவர்கள் கத்தோலிக்கராய் இருந்தவர்கள். இப்பொழுது இங்கே இருக்கிறார்கள். நான் கூறுவது உண்மை என்று அவர்கள் அறிவர். என்னுடைய குடும்பத்தார் இதற்கு முன்னர் கத்தோலிக்கர்களாய் இருந்தனர். புரிகின்றதா? 271. அவர்கள் பரிசுத்த பாட்ரிக் அவர்களை ஒரு கத்தோலிக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள், ஆனால் அவர் ஒரு கத்தோலிக்கர் அல்ல. ஜோன் ஆப் ஆர்க் ஒரு பரிசுத்தவாட்டி என்றார்கள், அவளை ஒரு மந்திரக்காரி என்ற அவர்கள் சுட்டெரித்து விட்டார்கள். "வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்களே, திர்க்கதரிசிகளின் கல்லறைகளை வெள்ளை அடித்து நீங்களே அதற்குள்ளாக அவர்களைப் போட்டவர்களும் நீங்களே'' என்று இயேசுவானவர் கூறினதில் வியப்பு ஒன்றும் இல்லை. 272. கவனியுங்கள், இது ஒரு மனிதனின் இலக்கமே. உயரே அங்கே ரோமாபுரியின் போப் - பின் மேல் விகாரியர் ஃபிளிடேயி' என்று எழுதப்பட்டிருக்கின்றது. (VICARIUS FILI DELL) அது ரோம எழுத்தர்களால் எழுதப்பட்டிருக்கிறது. நீங்களே நாளைக்கு அந்த ரோம அச்சரங்களை எழுதி அதாவது விக்கர் (VICAR) என்று தனியாக எழுதி அவைகளின் மேலும் கீழுமாய் கோடுகளை எழுதி அவைகளை கூட்டி உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று பாருங்கள். அறுநூற்று அறுபத்தி ஆறு என்ற (666) அது இருக்கும். அவன் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறான்? ஏழு மலைகளின் மேல், 273. அங்கே இருந்து வெளிவந்ததுதான் மார்க்க ஸ்தாபனம் அது வேதத்திற்கு பதிலாக கோட்பாடுகளை போதித்தது. புரோட்டஸ்டன்ட்-கள் அதிலிருந்து வெடித்து வெளியில் வந்து அதே காரியத்தை அவர்களும் செய்கிறார்கள், காரணம், என்னவென்றால், அவள் "மகாவேசி'' (WHORE) என்றும், அவர்கள் ''வேசிகள்'' (HARLOTS) என்றும் வேதம் கூறுகின்றது. ஒரு தவறான மார்க்கத்தையும், ஒரு தவறான ஞானஸ்தானத்தையும், நரகத்தைக் குறித்து ஒரு தவறான கருத்துடனும், இன்னும் மற்ற பல காரியங்களையும் கொண்டு வந்து அதே அடிச்சுவடுகளில் புரோட்டஸ்டன்டுகளும் செல்கின்றனர். "ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமையின் பாதையை நிச்சயம் கண்டடைவீர்கள் அதுசரியே, வெளிச்சமே இன்றைக்குள்ள பாதை விலையேறப் பெற்ற இயேசுவின் நாமத்தில் புதைக்கப்பட்டுள்ளது. வாலிபரே, வயோதிபரே, உங்கள் எல்லா பாவத்திலிருந்தும் மனம் திரும்புங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உங்களுக்குள் பிரவேசிப்பார். சாயங்கால வெளிச்சங்கள் உண்டாகிவிட்டன. தேவனும் - கிறிஸ்துவும் ஒன்று என்பது சாத்தியமே' (சகோ.பிரன்ஹாம் ஒரு பாடலை, சிலவரிகள் பாடுகிறார்கள்) 274. சகோதரனே சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று நான் கூறிக்கொண்டே இருக்கிறேன், அதே அப்போஸ்தல உபதேசம், அதே அப்போஸ்தல ஞானஸ்நானம், அதே அப்போஸ்தல பரிசுத்த ஆவி நிரப்புதல், அதே அப்போஸ்தல அடையாளங்களும் அற்புதங்களும் புறஜாதியார்களுக்கு, யூதர்களுக்கு, அதிகாலையில் சம்பவித்ததைப் போலவே, இங்கே சூரிய அஸ்தமன நேரத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது, 275. ஒ... இந்த மகிமையான சுவிசேஷத்திற்காக, இரத்தம் சொட்டிக் கொண்டே இருக்கிறது, ஆம் இரத்தம் துளித்துளியாக விழுந்து கொண்டே இருக்கிறது. 276. கிரயத்தை கணக்குப் பாருங்கள், ''ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை (மரணத்தை) எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்." "(சகோதரன் பிரன்ஹாம் பாடல் ஒன்றை பாடுகிறார்கள்) (சபையோர் எல்லோரும் களிகூர்ந்து செபம் செய்கின்றனர்) 277. நாம் அப்படியே திரும்பி ஒருவர் மற்றொருவருடைய கரத்தை குலுக்குவோமாக........ 278. நீங்கர் கர்த்தரை நேசிக்கிறீர்களா? கர்த்தர் உங்கள் ஆசிர்வதிப்பாராக. 279. பிதாவே இங்கு குழுமியுள்ளோரை நீர் ஆசீர்வதியும் அவர்கள் சந்தோஷத்துடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்களாக. இம்மானுவேலின் நரம்புகளில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்றண்டை அவர்கள் வருவார்களாக, அவர்கள் அந்த பழைய சபையின் மார்க்கரீதிகளை விட்டு விலகி பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வார்களாக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோ ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இரவு வணக்கம் தேவன் உங்களோடு இருப்பாராக…